திறன் மேம்பாட்டு மையங்கள் தொடக்கம்
- பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் கணினி துறையில் 2 திறன் மேம்பாட்டு மையங்கள் தொடங்கப்பட்டது
- இந்த மையத்தின் மூலம் பல வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் மாணவர்களுக்கு தேவையான பாடங்கள் கற்றுத்தரப்படும்
பெரம்பலூர்,
தமிழ்நாடு இன்பர்மேஷன் கம்யூனிகேஷன் டெக்னாலஜி அகாடமியின் (ஐ.சி.டி. அகாடமி ) சார்பில் செப்டம்பர் 30-ந் தேதி மதுரையில் பிரிட்ஜ் 2023-ன் 52-வது பதிப்பு மாநாடு நடைபெற்றது.டிரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான மனித மூலதனத்தை உருவாக்குதல் என்பதே இந்த கருத்தரங்கின் கருப்பொருள் ஆகும். எனவே இதை அடைவதற்கான சாத்தியக்கூறுகளை பற்றி விவாதிப்பதற்காக, கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒன்றிணைத்து இந்த மாநாடு நடத்தப்பட்டது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் கல்வி சேவையின் மூலம் சமூக வ ளர்ச்சிக்கு முக்கிய ப ங்காற்றும் மிக சிறந்த ஆளு மையாக விளங்குபவர். புதிய தொ ழில்முனைவோர்களையும், புதிய, சிறந்த கண்டுபி டிப்பாளர்களையும் உருவாக்குவதை இலட்சியமாக கொண்டு வாழ்ந்து வருபவர். இந்த மாநாட்டில் வேந்தரின் வழிகாட்டுதலின்படி, தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் ஐ.சி.டி. அகாடமியின் பங்களிப்புடன் கணினி துறையில் 2 எக்சலென்ஸ் மையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்த மையத்தின் மூலம் பல வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் மாணவர்களுக்கு தேவையான பாடங்கள் கற்றுத்தரப்படும். கிளவுட் கம்ப்யூட்டிங் துறையில் பல பெரிய சர்வதேச கம்பெனிகளில் பணியில் சேர மாணவர்களின் திறன்களை வளர்ப்பதற்க்காக அமேசான் வெப் சர்வீசஸ் மூலம் வழங்கப்படும் "கிளவுட் ஆர்கிடெக்ட்டிங்" என்ற பயிற்சி வகுப்பும் மற்றும் மைக்ரோசாப்ட் மூலம் வழங்கப்படும் மைக்ரோசாப்ட் பவர் பி.ஐ. டேட்டா அனலிஸ்ட் என்ற பயிற்சி வகுப்பும் ஐ.சி.டி. அகடெமியின் பங்களிப்புடன் இந்த மையத்தின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் சார்பாக, தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் முதல்வர் இளங்கோவன் உட்பட சுமார் 15-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். தொழில் நிறுவங்களின் தலைமை நிர்வாக இயக்குனர்கள் , மனித வளமேம்பாட்டு அதிகாரிகள் மற்றும் மூத்த கல்வியாளர்கள்களின் பயனுள்ள உரைகளை கேட்க இந்த குழுவிற்கு வாய்ப்பு கிடைத்தது. மாணவர்களை மையமாகக் கொண்ட செயல்பாடுகளில், நாம் அனைவரும் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்த கருத்தரங்கில் பேசிய அனைவரும் சுட்டிக்காட்டினர். மேலும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களுடைய திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.