பெரம்பலூரில் தமிழ் ஆட்சி மொழி சட்ட விழிப்புணர்வு பேரணி
- பெரம்பலூரில் தமிழ் ஆட்சி மொழி சட்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
- கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரத்தை முன்னிட்டு ஆட்சி மொழி சட்ட விழிப்புணர்வு பேரணி பேரணி நடந்தது.பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் துவங்கிய விழிப்புணர்வு பேரணியினை கலெக்டர் கற்பகம் கொடியைசைத்து தொடங்கிவைத்து பொதுமக்கள் மற்றும் வணிக பெருமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.இப்பேரணியானது பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி சங்குபேட்டை வழியாக சென்று திரும்பி அரசு மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர். இதில் தமிழின் பெருமையை வெளிப்படுத்தும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கோஷங்கள் எழுப்பப்பட்டது.மேலும் மாணவ, மாணவிகள் "அன்னைத் தமிழே ஆட்சிமொழி, தமிழில் பெயர்ப்பலகை அமையட்டும், தமிழ்நாட்டின் வீதியெல்லாம் தமிழ் தழைக்கட்டும்" என்பதை வலியுறுத்தும் விதமாக துண்டு பிரசுரங்களை வணிக நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினார். நிகழ்ச்சியில் டிஆர்ஓ அங்கையற்கண்ணி, ஆர்டிஓ நிறைமதி, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.