கடலூர் மாவட்டத்தில் இ-சேவை மையம் தொடங்கிட மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
- ஆவின் பாலகம் அமைத்திட நிதி உதவியும் இலவச தையல் எந்திரமும் வழங்கப்பட்டு வருகிறது.
- இணைய தளங்களில் வரும் 28-ந் தேதி வரை விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது -
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வாயிலாக அவர்களின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தும் வகையில் மாற்றுத்திறனா ளிகள் சுயதொழில்புரிந்து முன்னேற்றம் அடைய மானியத்துடன் கூடிய வங்கி கடனும் மத்திய கூட்டுறவு வங்கியில் வட்டியில்லா கடனும் ஆவின் பாலகம் அமைத்திட நிதி உதவியும் இலவச தையல் எந்திரமும் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது, வருவாய் கிராமத்திற்கு ஒரு தனியார் இ-சேவை மையம் அமைக்க அரசு உத்திரவி ட்டதை தொடர்ந்து, கிராம தொழில்முனைவோர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் ஆகியோர்களுக்கு முன்னுரிமை அளித்து உரிய உரிமம் பெற இணைய தளங்களில் வரும் 28-ந் தேதி வரை விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இ-சேவை அமைக்க விருப்பமுள்ள மற்றும் தகுதி உள்ள மாற்றுத்தி றனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பு பெறுவ தற்கான மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்படும். இது தொடர்பான கூடுதல் தகவலுக்கு (விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்) மா வட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கடலூர் அனுகலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.