மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிகளில் சிறப்பு நிதி வழங்க நடவடிக்கை கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு
- தொழில் மேற்கொள்ள முயற்சி செய்து வருகின்றனர்.
- 2016 -ம் ஆண்டுக்கு பிறகு இந்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்து வரும் நிலையில் சிகரம் உன்னால் முடியும் தோழா மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில், மாற்றுத்திறனாளிகள் யாரிடமும் உதவி கேட்காமல் வங்கி கடன் மூலமாக தொழில் மேற்கொள்ள முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் வங்கி கடன் கிடைக்காத காரணத்தினால் ஏமாற்றத்துடன் இருந்து வருகிேறாம். கடந்த 2014 - 15-ம் ஆண்டு அன்றைய கலெக்டர் மூலமாக கடன் இல்லாத தொகையாக சிறப்பு நிதி உதவி வழங்கப்பட்டது. இதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றத்திறனாளிகள் சுயமாக தொழில் செய்து வந்தனர்.
இந்த நிலையில் 2016 -ம் ஆண்டுக்கு பிறகு இந்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆகையால் பல மாற்றத்தினாளிகள் மிகவும் சிரமப்பட்டு வருவதோடு வாழ்வாதாரம் இல்லாமல் இருந்து வருகின்றோம். ஆகையால் வங்கிகளில் சிறப்பு நிதி திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்து மாற்றத்தினைகளுக்கு உதவ வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.