உள்ளூர் செய்திகள்

முகாமில் தாசில்தார் தங்கையா கலந்து கொண்டு மனுக்களை பெற்றார்.

பெரியதாழையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனை வழங்கிட மனுக்கள் பெறும் முகாம்

Published On 2023-03-29 07:28 GMT   |   Update On 2023-03-29 07:28 GMT
  • மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.
  • முகாமிற்கு சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா தலைமை தாங்கினார்.

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் வட்டத்தில் 721 மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசு சார்பில் உதவித்தொகை பெற்று வருகின்றனர். அதில் 103 பேருக்கு வீட்டுமனை பட்டா இல்லாததால் அவர்களை கண்டறிந்து இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டிருந்தார். அதன்படி பெரியதாழை, படுக்கப்பத்து கிராமத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட மனுக்கள் பெறும் முகாம் பெரியதாழையில் நடைபெற்றது. சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்கள் பெற்றார். வட்ட துணை ஆய்வாளர் மகராசி முன்னிலை வகித்தார். முகாமில் பெறப்பட்டமனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி மாற்றுதிறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

முகாமில் வருவாய் ஆய்வாளர் வெயிலுகந்தமாள், பள்ளக்குறிச்சி சார் ஆய்வாளர் தேவிதா, கிராம நிர்வாக அலுவலர் கந்தவள்ளிக்குமார், வருவாய் உதவியாளர் மாரியம்மாள், பெரியதாழை ஊராட்சித் தலைவர் பிரதீபா, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் பேர்சில், சங்க நிர்வாகி ஐசக் ஜோசப், பெரியதாழை மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் பிரான்சிஸ், மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ், மீனவ கூட்டுறவு சங்கத் தலைவர் சந்தியா,மாவட்ட மீனவரணி செயலர் ரமேஷ், சாஸ்தாவிநல்லூர் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் லூர்துமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News