உள்ளூர் செய்திகள்
பணி நியமனம் செய்யக்கோரி கவுரவ விரிவுரையாளர்கள் சார்பில் தஞ்சை கலெக்டரிடம் மனு
- அரசாணை எண் 56-ஐ பின்பற்றி கவுரவ விரிவுரையாளர்களுக்கு உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும்.
- நேர்காணல் முறையை பின்பற்றவும், எழுத்து தேர்வு முறையை கைவிட வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் ,
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
அரசாணை எண் 56-ஐ பின்பற்றி கவுரவ விரிவுரையாளர்களுக்கு உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும், கல்லூரி ஆசிரியர் பணி நியமனத்தில் பணி அனுபவ நேர்காணல் முறையை பின்பற்றவும், எழுத்து தேர்வு முறையை கைவிட வேண்டும்.
ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மாநில தகுதித் தேர்வை உடனடியாக நடத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.