உள்ளூர் செய்திகள்

அமைச்சர் நேருவிடம் புளியங்குடி நகராட்சி சேர்மன் விஜயா சவுந்திரபாண்டியன் கோரிக்கை மனு அளித்தார்.

புளியங்குடியில் வாறுகால் சீரமைக்க நிதி ஒதுக்க கோரி அமைச்சரிடம் மனு

Published On 2023-07-14 08:40 GMT   |   Update On 2023-07-14 08:40 GMT
  • புளியங்குடி நகராட்சி சார்பில்அனைத்து பகுதிகளிலும் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
  • புளியங்குடி காந்தி மார்க்கெட்டில் கடைகள் கட்டும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது,

புளியங்குடி:

புளியங்குடியில் சாலை மற்றும் வாறுகால் கட்ட நிதியுதவி வழங்க வலியுறுத்தி அமைச்சர் நேருவிடம் நகர் மன்ற தலைவர் விஜயா சவுந்திரபாண்டியன் கோரிக்கை மனு அளித்தார். இதுபற்றி நகர் மன்ற தலைவர் விஜயா சவுந்திரபாண்டியன் கூறுகையில், புளியங்குடி நகராட்சி சார்பில் நகர்புற சாலைகள் அபிவிருத்தி திட்டம், நமக்கு நாமே திட்டம், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம், தூய்மை இந்தியா திட்டம் போன்ற திட்டங்கள் மூலமாக அனைத்து பகுதிகளிலும் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு பொது கழிப்பிடங்கள் சீரமைக்கப்படுகிறது.

மேலும் புளியங்குடி காந்தி மார்க்கெட்டில் கடைகள் கட்டும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது, தற்போது வாறுகால் மற்றும் குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா ஆலோசனையின் பேரில் உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேருவை நேரில் சந்தித்து புளியங்குடி நகராட்சிக்கு நிதியுதவி வழங்க கோரிக்கை வைத்துள்ளேன். அமைச்சரும் உடனடியாக நிதி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் என்று கூறினார்.

Tags:    

Similar News