உள்ளூர் செய்திகள்

குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் தேசிய தர உறுதி சான்று குழுவினர் ஆய்வு செய்த காட்சி.

அரசு ஆஸ்பத்திரியில் தேசிய தர உறுதி சான்று குழுவினர் 3-ம் கட்ட ஆய்வு

Published On 2022-06-16 08:50 GMT   |   Update On 2022-06-16 08:50 GMT
அரசு ஆஸ்பத்திரியில் தேசிய தர உறுதி சான்று குழுவினர் 3-ம் கட்ட ஆய்வு செய்தனர்.

குமாரபாளையம்:

குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் தேசிய தர உறுதி சான்று குழுவினர்
3-ம் கட்ட ஆய்வு செய்தனர்.பின்னர் அங்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

இது குறித்து தலைமை டாக்டர் பாரதி கூறியதாவது:-

நாமக்கல் சுகாதார இணை இயக்குனர் ராஜ்மோகன் தலைமையில், மண்டல அலுவலர் ஜெயந்தி உள்ளிட்ட தேசிய தர உறுதி சான்று குழுவினர் கடந்த பிப்ரவரி மாதம் 13-ந்தேதி முதற்கட்ட ஆய்வு செய்தனர். தொடர்ந்து தேசிய தரச்சான்று மண்டல அலுவலர் டாக்டர் அசோக் தலைமையிலான குழுவினர் 2-ம் கட்ட ஆய்வு செய்ததுடன், டாக்டர்கள், நர்சுகள், மருத்துவமனை பணியாளர்களுக்கு பயிற்சியும் வழங்கினர்.

நேற்று நடைபெற்ற 3-ம் கட்ட ஆய்வில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி மேற்பார்வையாளர் டாக்டர் வெங்கடேசன், தர்மபுரி சுகாதார துறை இணை இயக்குனர் டாக்டர் ராஜேஷ்கண்ணா, அரூர் அரசு ஆஸ்பத்திரி தரக்கட்டுபாடு ஒருங்கிணைப்பாளர் வாசுகி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். டாக்டர்கள், நர்ஸ்கள், பணியாளர்கள் எத்தனை பேர் உள்ளனர்? சம்பளம் எவ்வளவு தரப்படுகிறது? மொத்தம் இருக்கும் படுக்கை வசதி எத்தனை? என்பது உள்ளிட்ட பல கேள்விகள் கேட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News