மீன்பிடிக்க சென்றபோது பரிதாபம் ஏரியில் மூழ்கிய பரோட்டா மாஸ்டர் கதி என்ன? 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்
- துட்டம்பட்டி கிராமத்தில் உள்ள குழந்தான்பட்டி ஏரிக்கு நேற்று மதியம் 1 மணி அளவில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
- மறுக்கரைக்கு நீந்தி சென்று மீன் பிடிக்க போவதாக கூறிவிட்டு நீச்சல் அடித்து சென்றுள்ளார்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் இடங்கனசாலை அருகே உள்ள கஞ்சமலையூர் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 44) பரோட்டா மாஸ்டர்.
இவரும் அதே பகுதியைசேர்ந்த நண்பர் குமார் (42) என்பவரும் தாரமங்கலம் அருகிலுள்ள துட்டம்பட்டி கிராமத்தில் உள்ள குழந்தான்பட்டி ஏரிக்கு நேற்று மதியம் 1 மணி அளவில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
ஏரியின் கிழக்கு கரையில் மீன் பிடித்து கொண்டிருந்த போது சுப்ரமணி அங்கிருந்த–வர்களிடம் மறுக்கரைக்கு நீந்தி சென்று மீன் பிடிக்க போவதாக கூறிவிட்டு நீச்சல் அடித்து சென்றுள்ளார்.
அப்போது பாதி தூரம் சென்ற சுப்ரமணி மறுக்கரைக்கு செல்ல முடியாமல் திணறியுள்ளார். மேலும் திரும்பி வரமுடியாமலும் தவித்து தத்தளித்து கூச்சலிட்டுள்ளார்.
கரையில் இருந்த நண்பர் மற்றும் அங்கிருந்தவர்கள் காப்பாற்ற முடியாமல் தவித்துள்ளனர். அப்போது சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி ஏரியில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏரியில் 30 அடிமுதல் 40 அடிவரை ஆழம் இருப்பதால் அவரை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
நீரில் மூழ்கிய சுப்ரமணி கதி என்ன? என தெரிய–வில்லை. தொடர்ந்து இன்று 2-வது நாளாக அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அவரது உறவினர்கள் கதறி அழுத படி ஏரி கரையோரம் காத்திருக்கின்றனர்.