உள்ளூர் செய்திகள்

மரக்கன்றுகள் நட்ட முனைவர் பிரனேஷ் இன்பன்ட்ராஜ்.

மரங்களை நடுவது நிலையான தர்மத்திற்கு நிகரானது

Published On 2023-01-16 08:57 GMT   |   Update On 2023-01-16 08:57 GMT
  • சமூக ஆர்வலரான ரா.பிரனேஷ் இன்பன்ட்ராஜ் இவர் இளம் விஞ்ஞானி, முனைவர் பட்டம், பல விருதுகளைப் பெற்றவர்.
  • உலகத்தில் இருக்கும் முக்கிய பிரச்சனை பூமி வெப்பமயமாதல், நாம் நமது பஞ்ச பூதங்களை மாசில்லாமல் பாதுகாப்பது அவசியம், நோயில்லாமல் வாழ தூய்மையான காற்று அவசியம்.

தஞ்சாவூர்:

தஞ்சை பூக்கார முதல் தெருவை சேர்ந்தவர் ரா.பிரனேஷ் இன்பன்ட்ராஜ் (வயது 23). சமூக ஆர்வலரான இவர் இளம் விஞ்ஞானி, முனைவர் பட்டம், பல விருதுகளைப் பெற்றவர். லயன் தூதர்.

இவர் தஞ்சையில் பல இடங்களில் தனது சொந்த செலவில் மரக்கன்றுகள் வாங்கி நட்டு வருகிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

உலகத்தில் இருக்கும் முக்கிய பிரச்சனை பூமி வெப்பமயமாதல், நாம் நமது பஞ்ச பூதங்களை மாசில்லாமல் பாதுகாப்பது அவசியம். நோயில்லாமல் வாழ தூய்மையான காற்று அவசியம்.

இன்று காற்று மாசுபடுகிறது. மரங்களை அழிக்காமல் இருந்தாலே நாம் பெரும்பாலான பிரச்சனைகளை தவிர்த்து விடலாம். நடும் மரங்களை நாம் அனைவரும் ஒன்றாக பராமரித்தல் அவசியம்.

உலகில் மரங்களை நடுபவர்கள் மிகக் குறைவு.

ஆனால் மரங்களைப் பயன்படுத்துபவர்கள் அதிகம். மரம் மனிதனின் பயன்பாட்டிற்கு தன்னை அர்ப்பணிக்கிறது. மரங்களை நடுவது நிலையான தர்மத்திற்கு நிகரானது.

மரம் வளர்க்க முயல்பவர்களுக்கு துணை நிற்க வேண்டும்.

இதன் மூலம் இயற்கை வளங்களை நிச்சயம் பாதுகாக்க முடியும்.

பழங்காலத்தில் நமது முன்னோர்கள் 100 ஆண்டை கடந்தும் வாழ்ந்தார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் இயற்கையை பேணி பாதுகாத்தது தான். நாம் உயிர் வாழ ஆக்சிஜன் முக்கியமானது.

அந்த ஆக்சிஜனை மரங்கள் கொடுக்கிறது.

தவிர்க்க முடியாத காரணத்தால் ஒரு மரத்தை வெட்ட நேரிட்டால் அதற்கு பதில் 100 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். மற்றப்படி மரங்களை வெட்ட நினைக்க கூடாது.

நான் ஆண்டுக்கு 500 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க முடிவு செய்து அதறகான பணிகளை தொடங்கி விட்டேன். அனைவரும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News