அன்னூர் அருகே சாணிப்பவுடரை குடித்து பிளஸ்-1 மாணவர் தற்கொலை முயற்சி
- மயக்கம் தெளிந்த பின்னர் தான் எதற்காக சாணிப்பவுடரை குடித்தார் என்பது தெரிய வரும்
- அன்னூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்
கோவை,
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஏ.டி. காலனியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகன் ஜெகநாதன் (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஜெகநாதன் திடீரென சாணிப்பவுடரை கரைத்து குடித்தார்.
சிறிது நேரத்தில் வாந்தி எடுத்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் என்ன நடந்தது என கேட்டனர். அதற்குள் அவர் மயங்கி னார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக ஜெயநாதனை மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.பின்னர் ஜெகநாதனை டாக்டர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த தகவல் கிடைத்ததும் அன்னூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி சென்றனர்.
ஆனால் மாணவர் மயக்கமாக இருப்பதால் விசாரணை நடத்த முடியவில்லை. இதன் காரணமாக ஜெகநாதன் எதற்காக சாணிப்பவுடரை குடித்தார் என்பது தெரியவில்லை. அவர் மயக்கம் தெளிந்த பின்னர் தான் எதற்காக சாணிப்பவுடரை குடித்தார் என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.