உள்ளூர் செய்திகள்

சாதனை படைத்த மாணவிகளுக்கு பள்ளியின் நிறுவனரும் தாளாளருமானஎம்.எஸ். செங்கோல் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

பிளஸ்-2 தேர்வு முடிவுகள்ஸ்ரீமுஷ்ணம் தவஅமுதம் பள்ளி 14 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி

Published On 2022-06-21 09:46 GMT   |   Update On 2022-06-21 09:46 GMT
  • பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் ஸ்ரீமுஷ்ணம் தவஅமுதம் பள்ளி 14 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.
  • இந்த பள்ளியில் 203 மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர்.

கடலூர்:

ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு 203 மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர். தற்ேபாது வெளியான தேர்வு முடிவுகளில் 203 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இந்த பள்ளி தொடர்ந்து 14 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று, சாதனை புரிந்துள்ளது. இந்த பள்ளி மாணவி பி.பூஜா 585 மதிப்பெண்ணுடன் முதலிடத்தையும், மாணவிகள் டி.நிரஞ்சனா, எஸ்.ஓவியா ஆகியோர் 582 மதிப்பெண்களுடன் 2-ம் இடத்தையும் ஐஸ்வர்யா, ஏ.மணிபாலன், வி.ஆனிஜெர்லின் ஆகியோர் 575 மதிப்பெண்களுடன் 3-ம் டத்தையும் பிடித்தனர்.

மேலும் வேதியியலில் 9 பேரும், கணினி அறிவியலில் 9 பேரும் உயிரியலில் 2 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. முதல்வர் ஆர்.புனிதவள்ளி பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். பள்ளியின் நிறுவனரும் தாளாளருமானஎம்.எஸ்.செங்கோல் பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதில் மாணவ மாணவிகள், பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், மற்றும் மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். தேர்வு எழுதிய 203 மாணவர்களில், 95 பேர் 500 மதிப்பெண்களுக்கு மேலும், 24 பேர் 550 மதிப்பெண்களுக்கு மேலும், 6 பேர் 575 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News