பிளஸ்-2 பொதுத் தேர்வு: செஞ்சி அரசு பள்ளிகளில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
- செஞ்சி பகுதியை சேர்ந்த நெகனூர் மற்றும் இல்லோடு அரசு உயர்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பொது தேர்வு எழுதிய மாணவர்கள் 100% பேர் தேர்ச்சி பெற்றனர்.
- செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் அவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
விழுப்புரம்:
செஞ்சி பகுதியை சேர்ந்த நெகனூர் மற்றும் இல்லோடு அரசு உயர்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பொது தேர்வு எழுதிய மாணவர்கள் 100% பேர் தேர்ச்சி பெற்றனர். நெகனூர் அரசு பள்ளியில் 42 மாணவர்கள் 51 மாணவிகள் என 93 பேர் தேர்வு எழுதினர். அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இதேபோல் இல்லோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 41 மாணவர்கள் 34 மாணவிகள் என 75 பேர் தேர்வு எழுதினர். அவர்கள் அனைவரும் 100% தேர்ச்சி பெற்று சாதனை புரிந்தனர். அரசு பள்ளியில் பயின்று நூறு சதவீதம் சாதனை பெற்ற மாணவ மாணவிகளை பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.
மேலும் அரசு பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் செஞ்சி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகள் செந்தமிழ், ஜெயாஷாலினி, கோபிகிருஷ்ணன், குருநாத், உள்ளிட்டவர்களை செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் அவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.