உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு

Published On 2022-11-22 09:36 GMT   |   Update On 2022-11-22 09:36 GMT
  • சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1000க்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றனர்.
  • போலீஸ் நிலையத்தின் செயல்பாடுகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

சூலூர்

சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1000-க்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு போலீசார் பற்றிய சரியான புரிந்துணர்வு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து மாணவிகளையும் சூலூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீஸ் நிலையத்தின் செயல்பாடுகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் மாணவிகளுக்கான விழிப்புணர்வு கருத்துக்களும் எடுத்துரைக்கப்பட்டது. சூலூர் இன்ஸ்மாபெக்டர் தையன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் உள்ளிட்டோர் காவல் துறை அனைவரது நண்பன் என்றும், காவல்துறையை கண்டு தவறு செய்தவர்களே பயப்பட வேண்டும் என்று எடுத்துக் கூறினர்.

மேலும் காவல்துறையில் சட்டம் -ஒழுங்கு மற்றும் குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் செயல்படும் செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

காவல் நிலைய அலுவலக நிர்வாகம். வயர்லெஸ் கருவிகளின் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு, தொலைத்தொடர்பு கருவிகளின் உபயோகம் மற்றும் அவசியம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Tags:    

Similar News