உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரம் கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பது குறித்து போலீசார் ஆலோசனை கூட்டம்

Published On 2023-09-08 16:38 GMT   |   Update On 2023-09-08 16:38 GMT
  • இந்து முன்னனி அமைப்பாளர்கள், பி.ஜே.பி கட்சியினர் தனியாக சிலை வைப்போர் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
  • சுகாதாரத்துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஆலோசித்து கேட்ட வசதிகளை ஏற்படுத்தி தருவதாக கூறினர்.

மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், திருப்போரூர் சுற்றுவட்டார பகுதிகளில் வரும் 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு வைக்கப்படும் சிலைகள் மற்றும் அதை கடலில் கரைக்கும் இடத்தில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து, இன்று மாமல்லபுரத்தில் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் பகுதி காவல் ஆய்வாளர்கள், இந்து முன்னனி அமைப்பாளர்கள், பி.ஜே.பி கட்சியினர் தனியாக சிலை வைப்போர் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஆலோசனை கூட்டத்தில் விநாயகர் சிலைகள் வைக்கும் நபர்கள் அதை வாங்க செல்லும்போது ஊர்வலமாக செல்லக்கூடாது, சிலைகளை வைக்கும் பகுதி பாதுகாப்பாக இருக்க வேண்டும், பிற மதத்தினர் பகுதியில் இடையூறு செய்ய கூடாது, உயர்நீதிமன்ற உத்தரவின் படி பதாகைகள் வைக்க கூடாது, பிளாஸ்டிக், ரசாயனம் கலந்த சிலைகள் வைக்க கூடாது, நன்கொடை என்ற பெயரில் அடாவடி செய்யக்கூடாது, சிலைகளை கரைப்பதற்கு கடற்கரை வரும்போது மது அருந்தி விட்டு கோஷங்கள் போடக்கூடாது, போலீசார் கூறும் பாதை வழியாக மட்டுமே சிலைகளை எடுத்து வரவேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர்.

சிலைகள் வைக்கும் பக்தர்கள் அந்த சிலைகளை கரைக்க மாமல்லபுரம் கடற்கரை வரும்போது தங்களுக்கு குடிநீர், கழிப்பறை, கிரேன், மருத்துவ மையம், ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட வசதிகள் தேவை என போலீசாரிடம் கோரிக்கை வைத்தனர்.

போலீசார் அவர்களிடம் வருவாய்துறை, மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை உள்ளிட்டோரிடம் ஆலோசித்து கேட்ட வசதிகளை ஏற்படுத்தி தருவதாக கூறினர்.

Tags:    

Similar News