search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "meeting"

    • உங்களிடம் கேள்விகள் முன் வைக்கப்படும்போது அதற்கு எளிமையாக பதிலளியுங்கள்.
    • மீட்டிங்கில் இரண்டு விதமான நபர்கள் இருப்பார்கள்.

    அலுவலகத்திலோ அல்லது அலுவலக வேலையாக வெளியிடங்களிலோ, சந்திப்பு (மீட்டிங்) என்பது தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக மாறிவிட்டது. இது போன்ற 'மீட்டிங்'குகளில் பெரிய சவாலே, நாம் எப்படி பேசுவது, எதை முதலில் பேசுவது, அவசியமான நேரங்களில் குறுக்கீடு செய்யலாமா போன்ற பல கேள்விகள்தான் மனதில் ஓடும். அதை தெளிவுபடுத்துகிறது இந்த கட்டுரை தொகுப்பு.

    * பேசு பொருள் என்ன?

    பல விஷயங்களைப் பற்றி பேச வேண்டும் என்ற அழுத்தம் முக்கியமான மீட்டிங்குகளில் இடம் பெறும். ஆனால் பதற்றத்தில் எதை முதலில் பேசுவது என தெரியாமல் எதாவது ஒரு விஷயத்தில் ஆரம்பித்து எங்கேயோ கொண்டுபோய் முடித்துவிடுவோம். இதனை சமாளிக்க, மீட்டிங் ஹாலுக்குள் செல்லும் முன் பேச வேண்டிய விஷயங்களை ஒரு சிறிய தாளில் குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள். அதனை ஒரு முறை வரிசைப்படுத்துங்கள். இதைத்தான், இந்த வரிசையில்தான் பேசப்போகிறேன் என்ற நம்பிக்கையோடு பேசுங்கள். மொத்த மீட்டிங் நேரத்தில் உங்களுடைய பேச்சு 10 சதவிகித நேரம்தான் என்பதில் உறுதியாக இருங்கள். அதற்கு மேல் நீங்கள் பேசினால் உங்கள் கருத்துக்கள் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தாது. உங்களிடம் கேள்விகள் முன் வைக்கப்படும்போது அதற்கு எளிமையாக பதிலளியுங்கள்.

     

    * 80:20 விதியை கடைப்பிடியுங்கள்!

    ஒவ்வொரு மீட்டிங்கிலும் மேலாண்மை தத்துவமான 80:20 விதியைக் கடைப்பிடியுங்கள். ஒரு முக்கியமான மீட்டிங்கில் நீங்கள் பேசும் 20 சதவிகிதக் கருத்துக்கள் 80 சதவிகிதம் பேருக்கு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். மொத்த மீட்டிங்கும் உங்களது 20 சதவிகிதப் பேச்சை மையப்படுத்தியே இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். குறைவாகப் பேசி உங்கள் கருத்தைப் பற்றி அதிகமாக விவாதிக்க செய்யுங்கள்.

    * அதிகம் கேளுங்கள்!

    மீட்டிங்கில் இரண்டு விதமான நபர்கள் இருப்பார்கள். ஒருவர் உடலளவில் மீட்டிங்கில் இருப்பவர், இன்னொருவர் முழு கவனத்தோடு இருப்பவர். நீங்கள் இரண்டாவது நபராக இருங்கள். உங்களுக்கு தேவைப்படாத விஷயம் என்றாலும் மற்றவர் சொல்லும் விஷயத்தைக் கேளுங்கள். அவர்களது பேச்சில் உங்களுக்கான ஏதாவது ஒரு விஷயம் இருக்கும். மேலும் மற்ற நபர்களும் உங்களைக் கவனிக்க இது உதவும்.

    * குறுக்கீடு செய்யலாமா?

    ஒருவர் பேசும்போது குறுக்கிட்டுப் பேசுவதை தவிருங்கள். ஆனால் ஒரு விஷயம் தவறான கருத்தாக முன் வைக்கப்படுகிறது என்றால், மிகவும் மரியாதையாக அதில் குறுக்கிட்டு அதனைத் தவறானதாகக் குறிப்பிடாமல், அதற்கான சரியான விளக்கத்தை அளிக்க முயற்சி செய்யுங்கள். வேறு யாராவது இதனைச் சுட்டிக்காட்டுவார்கள் என இருப்பதை விட தானாக முன் வந்து சுட்டிக் காட்டுவதையே நிர்வாகம் விரும்பும்.

    * செல்போன் வேண்டாம்!

    உங்களுக்கு தொடர்பில்லாத விஷயங்கள் பேசப்படும்போது கான்பிரன்ஸ் ஹாலில் செல்போன் பயன்படுத்துவது, கேம் விளையாடுவது போன்ற விஷயங்களைச் செய்யாதீர்கள். அது சில முக்கியமான பிரசன்டேஷன்களின் போது இருட்டாக உள்ள அறையில் தனியாகத் தெரியும். மேலும் உங்கள் மீது உள்ள நல்ல எண்ணம் பாதிக்க வாய்ப்புள்ளது. அதனால் பொதுவாக மீட்டிங்கில் செல்போன் பயன்படுத்துவதைத் தவிருங்கள்.

    இந்த 5 விஷயங்களை கடைப்பிடித்தால் பெரும்பாலான மீட்டிங்குகள் உங்கள் வசமே இருக்கும்.

    • பாராளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து நிர்வாகிகளுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஆலோசித்தார்.
    • அப்போது பேசிய அவர், 2026 சட்டசபை பொதுத்தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்கப்படும் என்றார்.

    சென்னை:

    சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

    அப்போது பேசிய அவர், 2026 சட்டசபை பொதுத்தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்கப்படும். தேர்தலுக்காக பணியாற்ற வேண்டும் என கட்சியினருக்கு அறிவுறுத்தினார். இதற்கிடையே, தேர்தல் தோல்வி குறித்து மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை முடிந்துள்ளது.

    இந்நிலையில், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 9-ம் தேதி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளது.

    ஆகஸ்ட் 9-ம் தேதி காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலாளர் கூட்டம் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது.

    இந்தக் கூட்டத்தில் தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்தக் கூட்டத்தில் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது, மாவட்ட அளவில் கட்சியை பலப்படுத்துவது, சட்டசபை தேர்தலுக்கு தயாராகுவது, தேவையான குழுக்களை அமைப்பது, சசிகலா, ஓபிஎஸ் குறித்த விஷயங்களை விவாதிப்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என தெரிகிறது.

    • மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை இன்று சந்தித்தார்.
    • ராகுல்காந்தி, எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிறகு முதன்முறையாக மணிப்பூர் சென்றிருக்கிறார்.

    மணிப்பூரில் குக்கி - மெய்தி சமூக மக்களுக்கிடையே வெடித்த வன்முறைக் கலவரம் ஒராண்டைக் கடந்தும் நீடிக்கிறது. தற்போதுவரை பிரதமர் மோடி மணிப்பூர் செல்லாதது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

    இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை இன்று சந்தித்தார்.

    தேர்தலுக்கு முன்பு இரண்டு முறை மணிப்பூர் சென்ற ராகுல்காந்தி, எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிறகு முதன்முறையாக மணிப்பூர் சென்றிருக்கிறார்.

    மணிப்பூரில் ஜிப்ராம், சுராசந்த்பூர், மொய்ராங் ஆகிய பகுதிகளில் இருக்கும் நிவாரண முகாம்களை ராகுல் காந்தி பார்வையிட்டார்.

    ஜிப்ராம் முகாமில் தங்கவைக்கப்பட்டிருப்பவர்களிடம் ஆறுதல் கூறிய ராகுல் காந்தி, தற்போதைய சூழல் குறித்து விசாரித்தார். மேலும், அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். இதையடுத்து மாலை மணிப்பூர் ராஜ்பவனில் ஆளுநர் அனுசுயா உய்கேயை சந்தித்தார். ஆளுநர் அனுசுயா ராகுல் காந்திக்கு நினைவு பரிசு வழங்கினார்.

    இதனையடுத்து ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மணிப்பூர் இந்தியாவின் பெருமைக்குரிய மாநிலமாகும். மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க ஒவ்வொரு தேசபக்தரும் உதவ வேண்டும். பிரதமர் மோடி ஓரிரு நாட்கள் நேரம் ஒதுக்கி மணிப்பூர் மக்களை சந்திக்க வேண்டும். இங்கு என்ன நடக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். அது மக்களுக்கு சற்று ஆறுதலை தரும். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவதற்கு உதவ காங்கிரஸ் தயாராக உள்ளது" என்று தெரிவித்தார்.

    • நிவாரண முகாமில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தார்.
    • எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிறகு முதன்முறையாக மணிப்பூர் சென்றிருக்கிறார்.

    மணிப்பூரில் குக்கி - மெய்தி சமூக மக்களுக்கிடையே வெடித்த வன்முறைக் கலவரம் ஒராண்டைக் கடந்தும் நீடிக்கிறது. தற்போதுவரை பிரதமர் மோடி மணிப்பூர் செல்லாதது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவிருப்பதாக அண்மையில் அறிவித்தார். இதற்கிடையில், ஜூன் 6-ம் தேதி ஜிரிபாமில் மெய்தி சமூகத்தைச் சேர்ந்த விவசாயி சோய்பம் சரத் சிங் என்பவர் கழுத்தில் காயங்களுடன் இறந்துகிடந்தார். அதைத் தொடர்ந்து, அங்கு மீண்டும் வன்முறை வெடித்து பதற்றமான சூழல் நிலவுகிறது.


    இந்த நிலையில், அஸ்ஸாமில் பெய்து வரும் தொடர் கனமழையால், 28 மாவட்டங்களில் சுமார் 22.70 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதனால், இன்று மணிப்பூர் புறப்பட்ட ராகுல் காந்தி, பயணத்தின் வழியில், அஸ்ஸாமில் உள்ள காச்சார் மாவட்டத்திற்கு சென்று ஃபுலெட்ரல் கிராமத்தில் உள்ள நிவாரண முகாமில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தார். அவர்களிடம் நிவாரணம் குறித்தும், அரசின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து மணிப்பூர் சென்றார்.


    மணிப்பூரில் ஜிப்ராம், சுராசந்த்பூர், மொய்ராங் ஆகிய பகுதிகளில் இருக்கும் நிவாரண முகாம்களைப் பார்வையிட்டார் ராகுல் காந்தி. தேர்தலுக்கு முன்பு இரண்டு முறை மணிப்பூர் சென்றவர், எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிறகு முதன்முறையாக மணிப்பூர் சென்றிருக்கிறார். ஜிப்ராம் முகாமில் தங்கவைக்கப்பட்டிருப்பவர்களிடம் ஆறுதல் கூறிய ராகுல் காந்தி, தற்போதைய சூழல் குறித்து விசாரித்தார். மேலும், அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். இதையடுத்து மாலை மணிப்பூர் ராஜ்பவனில் ஆளுநர் அனுசுயா உய்கேயை சந்தித்தார். ஆளுநர் அனுசுயா ராகுல் காந்திக்கு நினைவு பரிசு வழங்கினார்.


    சந்திப்பை தொடர்ந்து மணிப்பூர் ஆளுநர் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த மாநாடு டெல்லியில் வைத்து நடைபெற்றது.
    • மேற்கு நாடுகள் இந்த சந்திப்பை பொறாமையுடன் மிகவும் உன்னிப்பாகவும் கவனித்து வருகிறது.

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வைத்து நடக்கும் 22 வது இந்தியா - ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி இன்று மதியம் ரஷியா செல்ல உள்ளார். இன்று மற்றும் நாளை [ஜூலை 8-ஜூலை 9] ரஷியாவில் தங்க உள்ள மோடி அதிபர் புதினிடம் இருநாட்டு பொருளாதார, வணிக மற்றும் ராஜ்ய உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கிடையிலும் வணிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த மாநாடு டெல்லியில் வைத்து நடைபெற்றது. அதன்பின் 2022 , 2023 ஆகிய ஆண்டுகளில் மாநாடு நடைபெறாத நிலையில் தற்போது இந்த வருடத்திற்கான மாநாடு நடைபெறுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததற்கு பிறகு முதல் முறையாக மோடி ரஷியா செல்ல உள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு ரஷியாவில் நடந்த பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக கடைசியாக ரஷியா சென்றிருந்தார் மோடி.




     

    மோடியின் வருகை குறித்து ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்லின் செய்தி தொடர்பாளர் திமித்ரி பெஷ்கோவ் பேசுகையில், 'மோடி - புதினின் சந்திப்பு விரிவானதாக இருக்கும். மோடியின் வருகையை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நாங்கள் கருதுகிறோம். இரு தலைவர்களும் ராஜ்ய உறவுகள் என்பதையும் தாண்டி இயல்பாக பல விஷயங்களை பேசுவர் என்று எதிர்பார்கிறோம்.மேற்கு நாடுகள் இந்த சந்திப்பை பொறாமையுடன் மிகவும் உன்னிப்பாகவும் கவனித்து வருகிறது. இதனாலேயே இந்த சந்திப்பு மமுக்கியத்துவம் பெருகிறது' என்று தெரிவித்துள்ளார்.  உக்ரைன் போரினால் ரஷியா மீது மேற்கு நாடுகள் பொருளாதர தடைகளை விதித்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

    • பாராளுமன்ற தேர்தலின் கடைசிக் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது.
    • இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு கலந்துகொண்டார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும்படி கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    பரபரப்பான சூழ்நிலையில் தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், தேஜ்ஸ்வி யாதவ் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு கலந்துகொண்டார்.

    இந்நிலையில், இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்தியா கூட்டணி 295 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறும் என உறுதியாக தெரிவித்தார்.

    • பாராளுமன்ற தேர்தலின் கடைசிக்கட்ட தேர்தல் இன்று நடக்கிறது.
    • இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு கலந்துகொள்கிறார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ளது. மீதமுள்ள 57 தொகுதிகளுக்கு இன்று கடைசி கட்ட தேர்தல் நடக்கிறது. இதையடுத்து, வரும் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினம் முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு கலந்துகொள்கிறார்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இதில் ராகுல் காந்தி, தேஜ்ஸ்வி யாதவ் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரான மம்தா பானர்ஜி இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அறிமுக இயக்குனரான ராம் கந்தசாமி எழுதி, இயக்கி இருக்கும் திரைப்படம் ’புஜ்ஜி அட் அனுப்பட்டி’.
    • இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். குழந்தைகளின் உணர்வுகளை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது இப்படம்.

    அறிமுக இயக்குனரான ராம் கந்தசாமி எழுதி, இயக்கி இருக்கும் திரைப்படம் 'புஜ்ஜி அட் அனுப்பட்டி'. இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். குழந்தைகளின் உணர்வுகளை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது இப்படம்.

    இப்படத்தில் கமல்குமார்,நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி,கார்த்திக் விஜய் ,குழந்தை நட்சத்திரம் பிரணிதி சிவ சங்கரன்,லாவண்யா கண்மணி,நக்கலைட்ஸ் ராம்குமார் ,நக்கலைட்ஸ் மீனா ,வரதராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை 9 வி ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

    ஓர் உயிரைத் தேடிப் பயணம் செய்யும் இரு உயிர்களின் கதையாக இப்படக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு திரைப்பட விழாக்களில் வெளியிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்ற 'புஜ்ஜி அட் அனுப்பட்டி' குழந்தைகள் உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும். குழந்தைகள் உலகத்தைத் திரையில் காட்டும் அனுபவமாக மே 31-ல் இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைப்பெற்றது. அதில் இயக்குனர் பேசியதாவது.


    நண்பர் வேல் மாணிக்கம் மூலம் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா அவர்களின் அறிமுகம் கிடைத்தது. நாங்கள் தயக்கத்தோடு அவரிடம் கேட்டபோது .அவர் பார்க்கலாம் என்றார். எடுத்த காட்சிகளை எல்லாம் கொடுத்து விட்டு வந்தோம். பார்த்துவிட்டுச் சொல்கிறேன் என்றார் . சில நாள் எதுவுமே கருத்து சொல்லாமல் இருந்தார் .பிறகு சந்தித்த போது,என் மகள் கேட்ட அதே கேள்வியைக் கேட்டார். ஆடு கிடைத்ததா இல்லையா என்று. படம் அவருக்குப் பிடித்திருந்தது சம்பளம் எப்படி இருக்குமோ என்று நாங்கள் யோசித்தபோது, அது எல்லாம் ஒன்றும் தேவையில்லை என்றார் .எங்களுக்கு பெரிய இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அந்த அளவிற்கு ஈடுபாடு காட்டிச் சிறப்பாக இசை அமைத்துக் கொடுத்து படத்தை உயர்த்தி உள்ளார்.

    இப்படம் வரும் மே 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆட்சி அமைப்பது யார் என்பது குறித்து இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் நடத்துகிறது.
    • பிரதமர் தேர்வு பற்றியும் இந்தக் கூட்டத்தில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்து விட்டது. 7-வது கட்டமாக 57 தொகுதிகளுக்கு வரும் ஒன்றாம் தேதி தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

    இதையடுத்து, ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அன்று மதியம் மத்தியில் ஆட்சியைப் பிடிப்பது யார் என்பது உறுதியாகி விடும். பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 543 இடங்களில் 272 இடங்களை பெறும் கட்சி ஆட்சி அமைக்கும்.

    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி 3-வது தடவையாக ஆட்சி அமைக்க தீவிரமாக உள்ளது. இந்தியா கூட்டணி தலைவர்கள் தாங்கள்தான் மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என கூறி வருகிறார்கள். இதனால் மத்தியில் யார் ஆட்சி அமையும் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    வரும் 1-ம் தேதி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், தி.மு.க, சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, ராஷ்டிரீய லோக்தளம் உள்பட 28 கட்சிகள் உள்ளன. இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்பது பற்றியும், தேர்தல் முடிவுகளைப் பொறுத்து அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி விவாதித்து முடிவுசெய்ய உள்ளனர். பிரதமர் தேர்வு பற்றியும் இந்தக் கூட்டத்தில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு இடையிலான ஆலோசனைக் கூட்டத்தில் தான் பங்கேற்கப் போவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சிகள் முடிவுக்கு கட்டுப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

    • திடீரென தஞ்சாவூர் ஆப்ரகாம் பண்டிதர் சாலையில் உள்ள கிருஷ்ணசாமி வாண்டையார் வீட்டிற்கு சென்றார்.
    • அண்ணாமலையும் கிருஷ்ணசாமி வாண்டையாருக்கு சால்வை அணிவித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் அருகே உள்ள பூண்டியை பூர்வீகமாக கொண்டவர் மறைந்த துளசி அய்யா வாண்டையார். இவரது மகன் கிருஷ்ணசாமி வாண்டையார். பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர். கிருஷ்ணசாமி வாண்டையார் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளார். அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனின் சம்பந்தி.

    இந்நிலையில், நேற்று மாலை பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தஞ்சை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவையாறில் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். முன்னதாக அவர் மாலையில் தஞ்சையில் தான் தங்கி இருந்த ஓட்டலில் இருந்து திடீரென தஞ்சாவூர் ஆப்ரகாம் பண்டிதர் சாலையில் உள்ள கிருஷ்ணசாமி வாண்டையார் வீட்டிற்கு சென்றார்.

    அவருக்கு கிருஷ்ணசாமி வாண்டையார் ஏலக்காய் மாலை அணிவித்து வரவேற்றார். அப்போது அண்ணாமலையும் கிருஷ்ணசாமி வாண்டையாருக்கு சால்வை அணிவித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.

    பின்னர் கிருஷ்ண சாமியும், அண்ணாமலை மட்டும் தனி அறைக்கு சென்று சில நிமிடங்கள் பேசி கொண்டிருந்தனர். இதைத் தொடர்ந்து வெளியே வந்த அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நீண்ட காலமாக கிருஷ்ணசாமி வாண்டையாரை பார்க்க ஆசை. சென்னையில் சந்தித்தபோது, நான் தஞ்சாவூருக்கு வரும்போது, உங்களது வீட்டுக்கு வந்து காபி அருந்துகிறேன் என கூறினேன். அதன்படி வந்துள்ளேன்.

    இவர்களது குடும்பத்தின் மீது எங்களது தலைவர்கள் எல்லோருக்கும் பெரிய மரியாதை உண்டு. நான் தேர்தல் பிரசாரத்துக்கு வரும்போது மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளேன். இந்த சந்திப்பை எல்லாம் அரசியல் வட்டத்துக்குள் போட்டு அடைக்க வேண்டாம். இதில் அரசியல் உள்நோக்கம் ஏதும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து கிருஷ்ணசாமி வாண்டையார் கூறுகையில்:-

    நான் காங்கிரஸ் கட்சியை விட்டு, பா.ஜனதாவில் இணையமாட்டேன். எனக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் சந்திக்க வந்துள்ளனர். இதில் வேறு ஏதும் உள்நோக்கம் கிடையாது என்றார். இந்த சந்திப்பின்போது பா.ஜனதா வேட்பாளர் கருப்பு முருகானந்தம், தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவை திடீரென சந்தித்தார்.
    • பெண்கள் பிரச்சினை மற்றும் பல்வேறு சமூக பிரச்சினைகளுக்காக அடிக்கடி குரல் கொடுத்து வருகிறார்.

    தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக திகழ்பவர் குஷ்பு. பாரதிய ஜனதா கட்சியில் தேசிய செயற்குழு உறுப்பினராகவும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார். பெண்கள் பிரச்சினை மற்றும் பல்வேறு சமூக பிரச்சினைகளுக்காக அடிக்கடி குரல் கொடுத்து வருகிறார்.

    இந்த நிலையில் குஷ்பு நேற்று முன்தினம் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவை திடீரென சந்தித்தார். சந்திப்பின்போது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பெண்கள் பிரச்சினைகள் பற்றியும் ஜனாதிபதி முர்முவுடன் குஷ்பு விவாதித்துள்ளார். ஜனாதிபதி முர்முவை சந்தித்த புகைப்படங்களை குஷ்பு தனது வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

    • சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர் சாதாரண கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டம் நடக்கும்போது அரங்கத்தில் இருந்து தி.மு.க., பா.ம.க. கவுன்சிலர்கள் வெளியேறினர். இதனால் தீர்மானங்கள் எதுவும் நிறைவேறாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர் சாதாரண கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு அ.தி.மு.க.வை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பானுமதி பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீஸ்வரன், வாசுதேவ பிரபு முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. உட்பட 10 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் நடக்கும்போது அரங்கத்தில் இருந்து தி.மு.க., பா.ம.க. கவுன்சிலர்கள் வெளியேறினர். இதனால் தீர்மானங்கள் எதுவும் நிறைவேறாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

    கூட்டத்தில் பேசிய ஒன்றிய குழு தலைவர் பானுமதி பாலசுப்பி ரமணியன் மன்ற பொருள் தன்னை ஆலோசிக்காமல் அதிகாரிகளே தயார் செய்து எடுத்து வருகின்றனர்.

    தி.மு.க. கவுன்சிலர்கள் வார்டுகளான சூரப்பள்ளி மற்றும் ஆவடத்தூர் பகுதிக்கு அதிகாரிகள் அதிக நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. மற்ற வார்டுகளுக்கு குறைவான நிதி ஒதுக்கப்படுகிறது. அனைத்து வார்டுகளுக்கும் பொது நிதியை சமமாக பிரித்து வழங்க வேண்டும்.

    மேலும் பொது நிதி மூலம் செய்யப்படும் வரவு, செலவு கணக்குகளை முறையாக அதிகாரிகள் தெரிவிப்பதில்லை என குற்றம் சாட்டினார்.

    தொடர்ந்து அவர் உள்பட 4 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்ட அரங்கில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ×