நெல்லையில் 47 முகாம்களில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி
- தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் போலியோ 3-வது தவணை தடுப்பூசி மருந்து வழங்கும் திட்டம் தமிழகத்தில் இன்று நடைபெற்றது.
- நெல்லை மாநகர பகுதியை பொறுத்தவரை 10 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட மொத்தம் 47 மையங்களில் இன்று வழங்கப்பட்டது.
நெல்லை:
தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் போலியோ 3-வது தவணை தடுப்பூசி மருந்து வழங்கும் திட்டம் தமிழகத்தில் இன்று நடைபெற்றது.
நெல்லை மாவட்டத்தி லும் இன்று 3-வது தவணை போலியோ தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட ஏராளமான மையங்களில் நடைபெற்றது.
பிறந்த குழந்தைகளுக்கு 2 தவணைகளாக 6-வது வாரத்திலும், 14-வது வாரத்திலும் போலியோ தடுப்பூசி ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது.
இதை தவிர முன் எச்சரிக்கை யாக பிறந்த குழந்தைகளுக்கு 9-வது மாதம் முதல் 12 மாதங்களுக்குள் 3-ம் தவணை யாக போலி யோ தடுப்பூசி இன்று போடப் பட்டது. நெல்லை மாநகர பகுதியை பொறுத்தவரை 10 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட மொத்தம் 47 மையங்களில் இன்று வழங்கப்பட்டது.
மாநகர பகுதியில் நகர் நல அலுவலர் சரோஜா ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் இன்று காலை முதல் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பாளை ஏ.ஆர்.லைனில் உள்ள மாநகராட்சி அங்கன்வாடி மையத்தில் டாக்டர் தமிழரசி தலைமை யில் நடந்த முகாமினை மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா பார்வையிட்டு அறிவுரைகள் வழங்கினார்.