உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள்.

பூம்புகார் கல்லூரி மாணவர்கள் 3-வது நாளாக தொடர் போராட்டம்

Published On 2023-02-15 09:43 GMT   |   Update On 2023-02-15 09:43 GMT
  • அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • கல்லூரி வெளியே அமர்ந்து போராடிவரும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மேலையூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பூம்புகார் கல்லூரி இயங்கி வருகிறது.

இங்கு சீர்காழி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த கல்லூரி முன்பு அடிப்படை வசதி செய்து தரக்கோரி மாணவர்கள் இன்று 3-வது நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே போல 40க்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்கு பணி மேம்பாடு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என போராடி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் ஹரிப்பிரியா மற்றும் இணை ஆணையர் மோகனசுந்தரம், வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா உள்ளிட்டோர் இன்று பூம்புகார் கல்லூரிக்கு ஆய்வு நடத்த வந்தனர்.

அப்போது இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையரிடம் மாணவர்கள் கல்லூரிக்கு அடிப்படை வசதிகள் செய்து தராத முதல்வரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என கூறினர்.

இதைத் தொடர்ந்து கல்லூரி உள்ளே சென்ற கூடுதல் ஆணையர் கழிவறை, ஆய்வுக்கூடம், வகுப்பறை.உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார்.

பின்னர் ஒப்பந்தக்காரரை அழைத்து விரைந்து பணிகளை முடிக்கவேண்டும் என கூறினார்.

அதனைத் தொடர்ந்து கல்லூரி வெளியே அமர்ந்து போராடிவரும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்றார்.

அப்போது பேராசிரிய ர்கள் குறுக்கிட்டு தங்களது கோரிக்கைகளையும் கூறினர்.

அப்போது இணை ஆணையர் மோகனசுந்தரம் மற்றும் பேராசிரியர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை அடுத்து பேராசிரியர்கள் கல்லூரி வாயிலேயே நின்று முதல்வருக்கு உறுதுணையாக பேசும் இணை ஆணையர் மோகனசுந்தரத்தை பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும், முதல்வரையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மாணவர்கள் வெளியே போராடி வரும் சூழ்நிலையில் பேராசிரியர்கள் இணை ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

அசாம்விதங்களை தடுக்கும் பொருட்டு பூம்புகார் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். 

Tags:    

Similar News