உள்ளூர் செய்திகள்

அஞ்சலக சிறுசேமிப்பு செல்வமகள் திட்டம் தொடக்க விழாவில் பயனாளிகள்.

அஞ்சலக சிறுசேமிப்பு செல்வமகள் திட்டம் தொடக்க விழா

Published On 2023-08-02 10:12 GMT   |   Update On 2023-08-02 10:12 GMT
  • பெண் குழந்தைகளுக்கான அஞ்சலக சிறு சேமிப்பு செல்வமகள் திட்டம் தொடக்க விழா நடந்தது.
  • 10 கிராம ஊராட்சிகளில் வசிக்கும் 10 வயதுக்குட் பட்ட 120 பெண் குழந்தைகளுக்கு இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கும்பகோணம்:

திருவிடைமருதூர் வட்டம் திருப்பனந்தாள் அருகே பந்தநல்லூரில் 10 கிராம ஊராட்சி பெண் குழந்தைகளுக்கான அஞ்சலக சிறு சேமிப்பு செல்வமகள் திட்டம் தொடக்க விழா நடந்தது.

திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் கோ.க.அண்ணா துரை, ஒன்றிய செயலாளர்கள் மிசா மனோகரன், உதயசந்தி ரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் அஞ்சல் துறை மேலாளர் சுரேஷ்பாபு திட்ட விளக்கமளித்தார்.

அரசு தலைமை கொறடா கோவி செழியன், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

இதில் பந்தநல்லூர், நெய்குப்பை, நெய்வாசல், திருமங்கைச்சேரி, ஆரலூர், கீழ்மாந்தூர், கருப்பூர், வேளூர், அத்திப்பாக்கம், மேலக்காட்டூர் ஆகிய 10 கிராம ஊராட்சிகளில் வசிக்கும் 10 வயதுக்குட் பட்ட 120 பெண் குழந்தைகளுக்கு இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News