உள்ளூர் செய்திகள்

புளியங்குடி பவானி அம்மன் ஆலயத்தில் பவுர்ணமி பூஜை

Published On 2023-06-04 08:10 GMT   |   Update On 2023-06-04 08:10 GMT
  • பூஜையை முன்னிட்டு மாலை 5 மணிக்கு குருநாதர் சக்தியம்மா வைகாசி மாத பவுர்ணமி சிறப்பு குறித்து ஆன்மீக சொற்பொழிவாற்றினார்.
  • தொடர்ந்து முப்பெரும் தேவியர் அம்மாக்களுக்கு மஞ்சள் காப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

புளியங்குடி:

புளியங்குடி அருள்வாக்கிற்கு பிரசித்தி பெற்ற முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் அருள் பாலிக்கும் பெரிய பாளை யத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், பால நாகம்மன் ஆகிய தெய்வங்க ளுக்கு வைகாசி மாதாந்திர பவுர்ணமி பூஜை நடை பெற்றது.

பூஜையை முன்னிட்டு மாலை 5 மணிக்கு குருநாதர் சக்தியம்மா வைகாசி மாத பவுர்ணமி சிறப்பு குறித்து ஆன்மீக சொற்பொழிவாற்றினார். மாலை 6 மணி அளவில் பால், தயிர், மஞ்சள், சந்தனம், குங்குமம் மற்றும் நறுமணப் பொருள்கள் உட்பட 21 வகையான அபிஷேகங்களும், உலக மக்கள் நன்மைக்காகவும், மழை வேண்டியும் 1008 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது.

கோவில் வளாகத்தில் உள்ள பரிகார தெய்வங்களான பால விநாயகர், கல்யாண சுப்பிரமணியர், 18-ம் படி கருப்பசாமி, பவானி பத்ரகாளியம்மன், மகாகாளியம்மன், புற்று காளி, நாகக்காளி ரத்தக்காளி, சூலக்காளி ஆகிய தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து முப்பெரும் தேவியர் அம்மாக்களுக்கு மஞ்சள் காப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 8 மணி அளவில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் கலந்து கொண்டு பாடல்கள் பாடி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News