உள்ளூர் செய்திகள்
தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு
- மகாநந்திக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- மகாநந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை பெரிய கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள மகாநந்திக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர், மகாநந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.