உள்ளூர் செய்திகள்

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷவழிபாடு:ஏராளமானோர் சாமி தரிசனம்

Published On 2023-09-28 07:01 GMT   |   Update On 2023-09-28 07:01 GMT
  • தயிர், சந்தனம் , பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் நடைபெற்றது.
  • கோவிலை வலம் இடமாகசுற்றி வந்துவிளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

கடலூர்:

திருவதிகை வீரட்டா னேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நேற்று மாலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு மாலை 4மணிக்கு மூலவர் வீரட்டானே ஸ்வரர்க்கு பால், தேன், தயிர், சந்தனம் , பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து தீபாராதனை நடைபெற்றது. கூடவே சிவனின் வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் வழங்கிய எண்ணை, பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றால் அபிஷேகம் நடை பெற்றது. பின்னர் அருகம் புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. நந்தி தேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு தீபாராதனை நடைபெற்றது. நந்தியின் 2 கொம்புகளுக்கிடையே தரிசின காட்சி காணும் வைபவம் நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு பிரதோஷ நாதர் ரிஷப வாகனத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வேண்டுதல் நிறைவேறவும், நேர்த்தி கடனுகாகவும் பிரதோஷ கால சுற்று முறையில் கோவிலை வலம் இடமாகசுற்றி வந்துவிளக்கேற்றி வழிபாடு செய்தனர். இதில் செயல் அலுவ லர் தின்ஷா மற்றும் உற்சவ தாரர்கள், சிவனடி யார்கள், சிவதொண்டர்கள் கலந்து கொண்டு இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News