உள்ளூர் செய்திகள் (District)

கடைக்காரர்கள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்

தரமான தீபாவளி இனிப்புகளை தயாரிக்க வேண்டும்- கடைக்காரர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை

Published On 2022-10-15 12:24 GMT   |   Update On 2022-10-15 12:24 GMT
  • தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம்.
  • உணவு பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தல்

தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு இனிப்பு மற்றும் காரம் வகை தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், கடைக்காரர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பூந்தமல்லியில் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை மற்றும் நிர்வாகத்துறை சார்பில் பூந்தமல்லியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு கூட்டத்திற்கு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஸ் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.

இந்த கூட்டத்தில் பூந்தமல்லி, கரையான்சாவடி, குமணன்சாவடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இனிப்பு கடைகள், பேக்கரிகள், இனிப்பு, காரம் தயாரிப்பவர்கள், விற்பனை செய்பவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பண்டிகை காலத்தில் தரமான இனிப்பு, காரம், தின்பண்டங்கள் தயாரிப்பது குறித்தும், செயற்கை நிரமூட்டிகளை தவிர்ப்பது, தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடுதல், தண்ணீர் பரிசோதனை, சுகாதாரம், பணியாளர்களின் நலன், மத்திய மாநில அரசுகள் வகுத்துள்ள உணவு பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

அதற்கான வழிமுறைகள், உணவு பாதுகாப்புத்துறை அனுமதி சான்று, பொதுமக்களை பாதிக்காத வகையில் உரிய விதிமுறைகளை பின்பற்றி உணவு மற்றும் தின்பண்டங்களை தயாரிப்பது குறித்து அதிகாரிகள் தரப்பில் விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டது.

நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் வேலவன், ரவிச்சந்திரன், இனிப்பு காரம் தயாரிப்பவர்கள், வியாபாரிகள், உணவகங்களின் உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News