சேலம் மார்க்கெட்டுகளில் ஆரஞ்சு பழங்கள் விலை 240 ரூபாக உயர்வு
- சேலம் மார்க்கெட்டுகளில் ஆரஞ்சு பழங்கள் விலை 240 ரூபாக உயர்ந்துள்ளது.
- இந்த ஆரஞ்சு பழங்கள் கடந்த மாதம் 150 ரூபாய்க்கு விற்ற நிலையில் தற்போது படிப்படியாக உயர்ந்து ஒரு கிலோ 240 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சேலம்:
சேலம் மார்க்கெட்டு களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்த பழங்களை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். குறிப்பாக ஆரஞ்சு பழங்களின் விலை சமீப காலமாக அதிக அளவில் உயர்ந்து ள்ளது. நாட்டு ஆரஞ்சு பழங்களின் சீசன் முடிந்துள்ள நிலையில் அதன் வரத்து இல்லாததால் அனைத்து கடைகளிலும் கமலா ஆரஞ்சு பழங்கள் தான் விற்பனைக்கு வைக்க ப்பட்டுள்ளன.
இந்த ஆரஞ்சு பழங்கள் கடந்த மாதம் 150 ரூபாய்க்கு விற்ற நிலையில் தற்போது படிப்படியாக உயர்ந்து ஒரு கிலோ 240 ரூபாய்க்கு விற்கப்ப டுகிறது. இதனால் பொது மக்கள் விலையை கேட்டு விட்டு அதிர்ச்சியுடன் அங்கிருந்து நகரும் நிலை ஏற்பட்டுள்ளது. உடல் நலம் சரியில்லாத வர்களுக்கு கூட ஆரஞ்சு பழங்கள் வாங்கி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆப்பிள் ஒரு கிலோ ரூ.200, மாதுளை 120, திராட்சை நீலம் 100, பச்சை 120, சப்போட்டா 30, பேரிக்காய் 120, கொய்யா 40, பப்பாளி 30 ரூபாய்க்கும் விற்பனை யாகிறது.