கடலூர் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 12-ந்தேதி நடக்கிறது
- வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி, காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற வுள்ளது.
- அனைத்து இளைஞர் களுக்கும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் வகையில் நடத்தப்பட வுள்ளது.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2023-24-ம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்திட திட்ட மிடப்பட்டு, கடலூர் மாவட்டத்தில் மகளிர் திட்டம் மூலம் வேலை வாய்ப்பில்லாத இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 12 ந்தேதி (சனிக்கிழமை) வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி, வள்ளலார் ஞான சபை எதிரில், வடலூரில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற வுள்ளது.
இம்முகாமில் மகளிர் திட்டம் தொழில் திறன் பயிற்சி பெற்ற இளைஞர் களுக்கு, மாவட்டத்தில் உள்ள தொழிற்கல்வி மற்றும் பொதுக்கல்வி படித்த அனைத்து இளைஞர் களுக்கும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் வகையில் நடத்தப்பட வுள்ளது. கடலூர் மாவட்ட த்தில் உள்ள கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, மேல்புவ னகிரி, பரங்கி பேட்டை, கீரப்பாளையம், கம்மாபுரம் மற்றும் விருத்தா சலம் உள்ள ஊரக மற்றும் நகர்புற இளைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.
கடலூர் மாவட்ட மகளிர் திட்டம் மூலம் இளைஞர் தொழில்திறன் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் இதர கல்வி தகுதிகளையுடைய இளைஞர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்று சான்றிதழ், சாதி சான்று, இருப்பிட சான்று, வருமானச் சான்று, குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை இத்துடன் 2 (பாஸ்போர்ட் சைஸ்) புகைப்படங்கள், சுய விலாச மிட்ட அஞ்சல் உறை களுடன் மேற்படி முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயனடையலாம். மேலும், இதர தகவல்களுக்கு மகளிர் திட்ட அலுவலகம், 3வது குறுக்கு தெரு, சீத்தாராமன் நகர், புதுப்பாளையம், கடலூர் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.