உள்ளூர் செய்திகள்

மாரத்தான் போட்டியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு கோப்பை- சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு

Published On 2023-03-08 08:53 GMT   |   Update On 2023-03-08 08:53 GMT
  • போட்டியானது கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோவிலில் இருந்து தொடங்கியது.
  • போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

சுவாமிமலை:

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கும்பகோணம் உட்கோட்ட காவல்துறை சார்பில் 10 முதல் 25 வயது வரை உள்ள பெண்களுக் கான மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது.

போட்டியை கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

போட்டியானது உச்சி பிள்ளையார் கோவில் அருகில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்து நிறைவடைந்தது.

போட்டியில் முதல் 2 இடங்களை மயிலாடு துறையை சேர்ந்த பெண்களும், 3-ம் இடத்தை கும்பகோணத்தை சேர்ந்த பெண்ணும் பிடித்தனர்.

அவர்களுக்கு கோப்பை, சான்றிதழ்களை கும்பகோணம் ரெட்கிராஸ் துணை சேர்மன் ரொசாரியோ முன்னிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் வழங்கினார்.

மேலும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியை கும்பகோணம் போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் சரவணகுமார் ஒருங்கிணைத் ்தார்.

இதில் ரெட்கிராஸ் நிர்வாகிகள் கணேசன், சிவக்குமார், ராமதாஸ், சபாபதி மற்றும் போலீசார், போக்குவரத்து போலீசார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News