உள்ளூர் செய்திகள்

ஓசூர் பேடரப்பள்ளி அரசு பள்ளியில் பரிசளிப்பு விழா

Published On 2023-02-19 09:44 GMT   |   Update On 2023-02-19 09:44 GMT
  • 3-வது இடத்தை மொத்தம் 9 பேர், சிறந்த ஓவியம் வரைந்ததற்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • இவர்களுக்கு பரிசளிப்பு விழா, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேடரபள்ளியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஒரு தனியார் நிறுவனம் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த ஓவியப்போட்டியை நடத்தின.

இதில், 6, 7, மற்றும் 8 ஆம் வகுப்பை சேர்ந்த 75 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். போட்டியில் 3 வகுப்புகளிலும், முதலாம் இடம், 2-வது இடம் மற்றும் 3-வது இடத்தை மொத்தம் 9 பேர், சிறந்த ஓவியம் வரைந்ததற்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு பரிசளிப்பு விழா, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு, தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் சுனிதா தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் பொன். நாகேஷ் வரவேற்றார். தனியார் நிறுவன மேலாளர் அனில்குமார் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு கேடயம், பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும் இதில் பள்ளி ஆசிரியர்கள், தனியார் நிறுவன அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News