கோவில்பட்டியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் மாணவ- மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா
- கோவில்பட்டி வேலாயுதபுரம் வேலாயுதம் நாடார் இல்லம் முன்பு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
- தூத்துக்குடி மாவட்ட டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற துணைத் தலைவர் தவமணி கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.
கோவில்பட்டி:
தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் ஆண்டு தோறும் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவிகளை பாராட்டி ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல இந்த ஆண்டும் கோவில்பட்டி வேலாயுதபு ரம் வேலாயுதம் நாடார் இல்லம் முன்பு பரிசளிப்பு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற துணைத் தலைவரும், பொறியாளருமான தவமணி கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.
தொடர்ந்து வேலாயுத புரம் முன்னாள் நாடார் சங்கத் தலைவர் ராஜரத்தினம், தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற இணைச் செயலாளர் துர்க்கேஸ்வரி குத்துவிளக்கேற்றி வைத்தனர்.
நிகழ்ச்சியில் நாகராஜன், செந்தில்நாதன், சுப்புராஜ், முனிய செல்வம், கண்ணன், பேச்சிலட்சுமி, இலக்கியா, ஜோதிலட்சுமி, செல்வப்ரியா, நதிஷ் லிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிலம்பம் பயின்ற மாணவ- மாணவி களும் பாராட்ட ப்பட்டனர். மன்ற தலைவர் முருகன் நன்றி கூறினார்.