புளியங்குடி அரசு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசு
- பள்ளிக்கு புதிதாக வந்த மாணவிகளுக்கு நகர்மன்ற தலைவர் விஜயா சவுந்தரபாண்டியன் இனிப்புகள், பூக்கள் வழங்கி வரவேற்றார்.
- மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
புளியங்குடி:
புளியங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்ப பள்ளிக்கு புதிதாக வந்த மாணவிகளுக்கு நகர்மன்ற தலைவர் விஜயா சவுந்தரபாண்டியன் இனிப்புகள். பூக்கள் வழங்கி வரவேற்றார்.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்சிக்கு தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். ஆசிரியை கைலாசம் வரவேற்றார். ஆசிரியை நீலாம்பிகை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தொடர்ந்து பள்ளி மைதானத்தில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்தார்.
அதனை தொடர்ந்து குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்றும் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்த கூடாது என்று பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பின்னர் பள்ளியில் கடந்த கல்வி ஆண்டில் பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கும், 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கும் நகர்மன்றத் தலைவி விஜயா சவுந்திர பாண்டியன் ரூ. 1000 பரிசு மற்றும் கேடயங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் பாத்திமா, 9-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சங்கரநாராயணன், ஆசிரியர்கள் முகம்மது, கண்ணன், மனோஜ் மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியை கள், அலுவலர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வ லர்கள், மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.