சிவகிரி பள்ளியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு
- புளியங்குடி வட்டார அளவிலான தனிநபர் போட்டி கடந்த மாதம் 23, 24- ந்தேதிகளில் வீரசிகாமனி விவேகானந்தா வெள்ளி விழா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
- ஆண்கள் பிரிவில் வட்டார அளவில் 24 புள்ளிகள் எடுத்து 3 -வது இடத்தை பெற்று, மாவட்ட போட்டிக்கு 6 மாணவர்கள் தேர்வு பெற்றனர்.
சிவகிரி:
புளியங்குடி வட்டார அளவிலான தனிநபர் போட்டி கடந்த மாதம் 23, 24- ந்தேதிகளில் வீரசிகாமனி விவேகானந்தா வெள்ளி விழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஆண்கள் பிரிவில் வட்டார அளவில் 24 புள்ளிகள், எடுத்து 3 -வது இடத்தை பெற்று, மாவட்ட போட்டிக்கு 6 மாணவர்கள் தேர்வு பெற்றனர். பெண்கள் பிரிவில் வட்டார அளவில் 29 புள்ளிகள் எடுத்து, 2-வது இடத்தையும் பெற்று கோப்பை வென்றது. மாவட்ட அளவில் 6 மாணவிகளும் தேர்வு பெற்றனர். இதனைத் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பதக்கம், கோப்பைகள், நினைவு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் சிதம்பரநாதன் பதக்கம், கோப்பைகள், நினைவு பரிசுகள், சான்றிதழ்கள் ஆகியவற்றை மாணவ - மாணவிகளுக்கு வழங்கி வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வர அறிவுரைகள் வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சிக்கு சிவகிரி சேனைத்தலைவர் மகாஜன சங்கத் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். பள்ளி செயலாளர் தங்கேஸ்வரன், பொருளாளர் ஆறுமுகம், துணைத்தலைவர் மூக்கையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சக்திவேலு வரவேற்று பேசினார். உடற்கல்வி ஆசிரியர் சண்முகவேலு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கல்வி குழு உறுப்பினர்கள், அறப்பணி குழு உறுப்பினர்கள், வீரகுமார், காசிராஜன், மோகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். உதவி தலைமை ஆசிரியர் இசக்கிமுத்து நன்றி கூறினார்.