பள்ளி குழந்தைகளுக்கான சதுரங்கப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு
- போட்டியில் சிவகிரி விவேகா பள்ளி, வாசுதேவநல்லூர் தரணி இன்டர்நேஷனல் பள்ளி உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
- போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
தென்காசி:
இடைகால் சாம்பியன் செஸ் அகாடமி சார்பாக பள்ளி குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான சதுரங்க போட்டி சிவகிரி பாரத் பள்ளியில் நடைபெற்றது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
இந்த போட்டியில் சிவகிரி விவேகா பள்ளி, வாசுதேவநல்லூர் தரணி இன்டர்நேஷனல் பள்ளி, தரணி மெட்ரிகுலேஷன் பள்ளி,கண்ணா இன்டர்நேஷனல் பள்ளி , வாசுதேவநல்லூர் அகஸ்தியா பள்ளி, இடைகால் அரசினர் பள்ளி, ஏ.ஆர்.எஸ் மதார் குருகுலம் பள்ளி,ஆகிய பள்ளிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
சதுரங்க போட்டியில் கிராமப்புற மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து வதற்காக சாம்பியன் செஸ் அகாடமி சார்பாக நடக்கும் போட்டியில் ஆனந்தன் பேசியதாவது:-
அடுத்த ஆண்டுக்குள் தென்காசி மாவட்டத்தில் இருந்து கிராண்ட் மாஸ்டராக இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் குழந்தைகளை உருவாக்குவோம், அதற்கு பெற்றோர்கள் குழந்தைகளின் சிந்தனை திறன்களை வளர்க்கும் விதமான புத்தகங்கள், பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கிராமப்புற குழந்தைகள் தங்களது அடுத்த கட்ட சிந்தனை சார்ந்த போட்டிகளுக்கு தயாராகவும் , மிகவும் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்றார்.
போட்டியில் குழந்தை களும் , ஏராளமான பெற்றோர்களும் பொதுப் பிரிவில் ஆர்வமாக பங்கேற்று தங்களின் திறமையை வெளிக்காட்டி பரிசுகளை தட்டிச் சென்றனர். பள்ளி தாளாளர் டாக்டர் எஸ். எஸ். செண்பகவிநாயகம், விவேகா மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் முருகேசன், ஐ.பி.எம். இந்திய தனியார் நிறுவனர் மாரிமுத்து, நடுவர்கள் பிரகாஷ்,சிவகணேஷ், மகாராஜன் உணவு பாதுகாப்பு வழங்கல், நெடுஞ்சாலை துறை போக்குவரத்து உதவி ஆய்வாளர் கமலக்கண்ணன், சேகர் கிராமப்புற ஆய்வாளர், சிவராமன் ஸ்ரீ குமரன் குரூப் ஆப் கம்பெனி, மருத்துவர் ரம்யா, மிரில்லா, தேவி ஆசிரியை ஆகியோர் கலந்து கொண்டனர். இப்போட்டியினை ஒருங்கினைப்பாளர் இசக்கி முத்து ஏற்பாடு செய்திருந்தார்.
போட்டி நடந்த இடத்தில் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான சிறு பிரசாரமும் வழங்கப்பட்டது. அத்துடன் சணல் மூலம் தயாரிக்கப்பட்ட மக்கும் பைகள் இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத முறையில் தேவிகா மகளிர் சுய உதவி குழு மூலம் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. பின்பு அவை மக்களுக்கு வழங்கப்பட்டது.