உள்ளூர் செய்திகள்

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்ட காட்சி.

சிவசக்தி வித்யாலயா பள்ளியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள்

Published On 2023-08-17 09:24 GMT   |   Update On 2023-08-17 09:24 GMT
  • தேசிய அளவிலான திறானாய்வு தேர்வுகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
  • சிறந்த முதல்வர் கேடயம் சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் நித்யா தினகரனுக்கு வழங்கப்பட்டது.

தென்காசி:

பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் கிராமம் பொடியனூரில் இயங்கி வரும் சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தினவிழா விழாவிற்கு அரியப்பபுரம் பஞ்சாயத்து தலைவர் எஸ்.ஆர்.டி தினேஷ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றினார். பள்ளி முதல்வர் நித்யா தினகரன் தலைமை தாங்கினார்.

மேலும் தேசிய அளவிலான திறானாய்வு தேர்வுகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மாநில அளவில் 3-ம் இடம் பெற்ற மாணவி அனோஷ்கா மற்றும் 5-ம் இடம் பெற்ற மாணவி இன்ஷிகா ஆகியோருக்கு தலா ரூ.1,200 ரூ.1,000 க்கான காசோலைகளையும் பதக்கங்களையும் சான்றிதழ்க ளையும் வழங்கப்பட்டது.

கல்வி வளர்ச்சி நாளன்று பள்ளியின் சார்பில் நடத்திய கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.

மேலும் இலஞ்சி பாரத் மாண்டிச்சோரி பள்ளியில் மாவட்ட அளவில் மாணவர்களுக்கு இடையேயான பெகாசஸ் போட்டியில் சக்தி வித்யாலயா பள்ளி பங்கேற்று இக்னைட் மைன்ட்ஸ் போட்டியில் வெற்றிகண்டு 2-ம் பரிசு பெற்ற 9-ம் வகுப்பு மாணவிகள் தனிஷா மற்றும் சஜிதா விற்கும், அறிவியல் திறனாய்வு போட்டியில் 3-ம் பரிசு பெற்ற மாணவன் ஜெய் ஸ்ரீதருக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் சிறப்பு விருந்தினரால் கொடுக்கப்பட்டன.

பாரத் பள்ளியின் சிறப்பு விருதான சிறந்த முதல்வர் கேடயம் சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் நித்யா தினகரனுக்கு வழங்கப்பட்டது. நெல்லையில் நடைபெற்ற முதலாம் கபடி சுற்றில் சிறப்பாக வெற்றி பெற்று தகுதியடைந்த மாணவ பிரிவினர் பின்னர் தென்மண்டல கபாடிபோட்டியிலும் பங்குப் பெற்று வெற்றியடைந்தனர். அவர்களுக்கான வெற்றிக் கோப்பையும், சான்றிதழ்களும் விளையாட்டில் சிறந்து விளங்குகின்றவர்களும் கவுரவிக்கப்பட்டனர்.

இடைகால் ஸ்டஅக் பள்ளியில் மாநில அளவில் நடைபெற்ற கோகோ போட்டியில் 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 4-ம் இடம் பிடித்த மாணவர்களைப் பாராட்டி பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் நித்யா தினகரன், பள்ளி ஆசிரியைகள் மற்றும் ஊழியர்கள்செய்திருந்தார்.

Tags:    

Similar News