உள்ளூர் செய்திகள்

வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் வழங்கினார்.

அரசு பள்ளியில் நடந்த விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு

Published On 2023-03-27 09:21 GMT   |   Update On 2023-03-27 09:21 GMT
  • செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தித்தர வேண்டும்.
  • மாணவர்கள் வாழ்வில் முன்னேற சிறந்த புத்தகங்களை படித்து பயன்பெற வேண்டும்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் அழிஞ்சமங்கலம் அரசு ஆதிதிராவிட நலப்பள்ளி துவங்கப்பட்டு நூற்றாண்டு கடந்துள்ளன.

இதை முன்னிட்டு நடை பெற்ற நூற்றாண்டு விழாவில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கலந்து கொண்டு பேசியதாவது:-

குழந்தைகளின் திறமைகளை வெளிக் கொண்டு வருவது என்பது ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உள்ள கடமை, பிள்ளைகளின் கல்வியை மெருகேற்ற செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை அவர்களுக்கு ஏற்படுத்தி தருவது மிக, மிக முக்கியமானது, எனவே மாணவர்கள் வாழ்வில் முன்னேற சிறந்த புத்தகங்களை படித்து பயன்பெற வேண்டும் எனவும் அவர் அறிவுரை கூறினார்.

பின்னர் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பாராட்டினார்.

நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர்கள், உதவியாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News