உள்ளூர் செய்திகள்

காணியாளன்பதியில் இருந்து திருச்செந்தூருக்கு ஊர்வலம் தொடங்கியபோது எடுத்த படம்

உலக அமைதிக்காக காணியாளன்பதியில் இருந்து திருச்செந்தூருக்கு ஊர்வலம் - திரளானோர் பங்கேற்பு

Published On 2023-03-04 07:04 GMT   |   Update On 2023-03-04 07:04 GMT
  • திருவிழாவில் 8-ம் நாளான கடந்த 28-ந் தேதி திருக்கல்யாண திருஏடு வாசிப்பு திருவிழா நடந்தது.
  • மாலை 5 மணிக்கு உலக மக்கள் அமைதிக்காக காணியாளன்பதியிலிருந்து திருச்செந்தூர் அய்யாவின் அவதார பதிக்கு ஊர்வலம் சென்றது.

குரும்பூர்:

குரும்பூரை அடுத்த சோனகன்விளை திருமலைப்பபுரத்தில் உள்ள அய்யா வைகுண்டரின் காணியாளன்பதி கோவிலில் 191-வது அவதார தினவிழா மற்றும் 13-ம் ஆண்டு அகலத்திரட்டு அம்மானை திரு ஏடு வாசிப்பு திருவிழா இன்று நடக்கும்.

இந்த திருவிழாவில் 8-ம் நாளான கடந்த 28-ந் தேதி திருக்கல்யாண திருஏடு வாசிப்பு திருவிழா நடந்தது. இதனையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

இதனைத்தொடர்ந்து 11-ம் நாளான நேற்று காலை 5 மணிக்கு அய்யாவின்பணிவிடை, உகப்படிப்பு அன்னபால், பகல் 12 மணிக்கு உச்சப்படிப்பு, அன்னதர்மம் நடந்தது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு உலக மக்கள் அமைதிக்காக காணியாளன்பதியிலிருந்து திருச்செந்தூர் அய்யாவின் அவதார பதிக்கு ஊர்வலம் சென்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில் காணியாளன்பதி நிறுவனர் நரசிம்மன், விழா கமிட்டியினர் தாமோதரன், ராஜா, இளங்கோ, பாலசுந்தர், ஜெயபாரத், ஜெயசிங், பிரகாஷ், சம்பத்குமார், பிரபு, ஜெகதீஷ், சல்லேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 12-ம் நாளான இன்று அய்யா அவதாரதினவிழா நடைபெற்றது. பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, அன்னதர்மம் நடந்தது.

மாலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, அன்னதர்மம் நடக்கிறது. ஏற்பாடுகளை திருமலையப்பபுரம், சோனகன்விளை, காணியாளன்புதூர் பகுதி மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News