உள்ளூர் செய்திகள்

பழமை மாறாமல் மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக சீர் எடுத்து சென்று அசத்தல்

Published On 2023-07-03 02:13 GMT   |   Update On 2023-07-03 02:13 GMT
  • 7 மாட்டு வண்டியில் தாய்மாமன் சீர்வரிசை கொண்டு வந்து அசத்திய நிகழ்வு நடைபெற்றது.
  • ஒரு குழந்தைக்கு காதணி விழா நடந்தது.

மதுரை :

தமிழகத்தின் பழமை மாறாமல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற காதணி விழாவில் 7 மாட்டு வண்டியில் தாய்மாமன் சீர்வரிசை கொண்டு வந்து அசத்திய நிகழ்வு நடைபெற்றது.

இந்த வகையில் உசிலம்பட்டி அருகே ரெயில்வே பீடர் ரோடு பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தைக்கு காதணி விழா நடத்தினர். இந்த விழாவிற்கு கருமாத்தூரிலிருந்து வந்திருந்த அவரது தாய்மாமன் தலைமையில் ஊர்வலமாக வந்த பொதுமக்கள் பாரம்பரிய முறைப்படி 7 மாட்டு வண்டிகளில் வெற்றிலை, பாக்கு, பழம், கரும்பு, இனிப்புகள் மற்றும் சீர்வரிசை பொருட்களை ஏற்றி வந்தனர்.

மேலும் கரகாட்டம், ஒயிலாட்டம், மாதிரி யானை ஊர்வலம், கேரள செண்டை மேளங்கள் முழங்க கதகளி நடனம் என சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு தாய்மாமன் ஊர்வலமாக வந்தது உசிலம்பட்டி பகுதியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Tags:    

Similar News