உள்ளூர் செய்திகள்

கலெக்டர் லலிதா.

குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை- கலெக்டர் தகவல்

Published On 2022-09-20 09:15 GMT   |   Update On 2022-09-20 09:15 GMT
  • மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 37 மனுக்கள், அடிப்படை வசதிகோரி 5 மனுக்கள் என மொத்தம் 175 மனுக்கள் பெறப்பட்டன.
  • மாணவனுக்கு ரூ.23,000-க்கான காசோலையை தாய் சித்ராவிடம் கலெக்டர் வழங்கினார்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடைபெற்றது.

மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து கலெக்டரிடம் மனுக்களை அளித்தனர்.

இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல், கோரி 40 மனுக்களும், வேலைவாய்ப்புகோரி 30 மனுக்களும், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித்தொகை கோரி 38 மனுக்களும், புகார் தொடர்பான மனுக்கள் 25 மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவிதொகை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 37 மனுக்களும், அடிப்படை வசதிகோரி 5 மனுக்களும், மொத்தம் 175 மனுக்கள் பெறப்பட்டன.

இம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவேண்டும் என தெரிவித்தார்.

முன்னதாக மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வானதிராஜபுரத்தை சேர்ந்த ஜெயவசந்தன் கல்வி உதவி கேட்டு, கடந்த வாரம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்திருந்தார்.

மனுவின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒரு வாரக் காலத்திற்குள் அம்மாணவனுக்கு மாவட்ட கலெக்டரின் தன் விருப்ப நிதியில் இருந்து ரூ.23,000-க்கான காசோலையினை அவரின் தாயார்சித்ரா விடம் கலெக்டர் லலிதா வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்டவருவாய் அலுவலர் முருகதாஸ், உதவி ஆணையர் கலால் அர.நரேந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்பாலாஜி மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News