உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்.ஆர்.எம்.யூ. சங்கத்தினர்.

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு, ஆதரவு தெரிவித்து ரெயில்வே சங்கத்தினர் நடத்திய போட்டி ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு

Published On 2022-06-29 09:25 GMT   |   Update On 2022-06-29 09:25 GMT
  • அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பி பேசினர்.
  • ரெயில்வேயில் விரைவில் ஒப்பந்த அடிப்படையில் ஆள் எடுக்க உள்ளதாக பொய்யான பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

நெல்லை:

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று எஸ்.ஆர்.எம்.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பழைய கட்டிடம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் சுப்பையா முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் தமிழரசன், சிவபெருமாள், இன்பரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அக்னிபத் திட்டத்தினால் இளைஞர்களின் கனவு தகர்ந்து போய்விட்டது. எனவே இந்த திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பி பேசினர்.

இதற்கிடையே அக்னி பத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சந்திப்பு ரெயில்வே புதிய கட்டிடம் அருகே பிட் லைனில் தட்சின ரெயில்வே கார்மிக் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ரெயில்வே துறையின் விதிக்கு எதிராக இளைஞர்களை திரட்டி போராட்டம் நடத்துவதாக கூறி அக்னிபத் திட்ட எதிர்ப்பாளர்களை கண்டித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் ராணுவத்தில் தற்போது ஆட்கள் எடுப்பதை போல ரெயில்வேயில் விரைவில் ஒப்பந்த அடிப்படையில் ஆள் எடுக்க உள்ளதாக பொய்யான பிரச்சாரங்களை சிலர் மேற்கொண்டு வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் எனவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதில் தென் மண்டல துணை பொதுச்செயலாளர் மணி, கோட்ட கூடுதல் செயலாளர் அருண்குமார், கிளை பொறுப்பாளர் ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News