உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவி ஒருவருக்கு கல்வி உதவித்தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.

கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்

Published On 2023-04-04 10:16 GMT   |   Update On 2023-04-04 10:16 GMT
  • தற்போது இறுதியாண்டு கட்டணமும், இ-தேர்வு கட்டணமும் வழங்கப்பட்டது.
  • மாணவ- மாணவிகளுக்கு சுமார் ரூ. 13 லட்சம் வரை கல்வி உதவி தொகை வழங்கல்.

தஞ்சாவூர்:

தஞ்சை ஜோதி அறக்கட்ட ளை சார்பில் விளிம்புநிலை குடும்பங்களை சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள அலுவ லகத்தில் நடைபெற்றது.

இதில் தஞ்சையில் உள்ள தனியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் தந்தையை இழந்த மாணவிக்கு ஏற்கனவே 2 ஆண்டுகள் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்ட நிலையில் தற்போது இறுதியாண்டு கட்டணமும், இ-தேர்வு கட்டணமும் வழங்கப்பட்டது.

இதே போல், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளத்தை சேர்ந்த தனியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிக்கும் கல்விக்கட்டணம் வழங்கப்பட்டது.

மேலும், சலவை தொழிலாளி ஒருவருக்கு சுயமாக தொழில் செய்ய புதிய இஸ்திரி பெட்டியும் வழங்கப்பட்டது.

இதுகுறித்து ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகையில்:-

கடந்த 2020 மார்ச் மாதம் தொடங்கப்பட்ட அறக்கட்டளை தற்போது வரை மாணவ- மாணவிகளுக்கு சுமார் ரூ. 13 லட்சம் வரை கல்வி உதவி தொகையாகவும், விளிம்புநிலை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்த வரையில் சுமார் ரூ. 34 லட்சம் வரையில் செலவிடப்பட்டுள்ள தாகவும், விளிம்புநிலை மக்களின் துயர் துடைக்கும் வகையில் சமூக விழிப்புணர்வு பிரச்சாரங்களிலும் ஜோதி அறக்கட்டளை தொடர்ந்து ஈடுபடும் என்றனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News