உள்ளூர் செய்திகள்
விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கல்
- இந்து மேனிலைப்பள்ளியில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறந்து.
- மாணவ, மாணவிகளுக்கு புத்தகம், நோட்டுகள், பள்ளி சீருடை அரசு வழங்கிய பொருட்களை வழங்கினார்.
சீர்காழி:
சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேனிலைப்பள்ளியில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறந்து 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகம், நோட்டுகள், பள்ளி சீருடை ஆகிய விலையில்லா அரசு வழங்கிய பொருட்களை உதவி தலைமை ஆசிரியர்கள் எஸ்.முரளிதரன், என்.துளசி ரங்கன், ஏ.வரதராஜன் முன்னிலையில், பள்ளி தலைமையாசிரியர் எஸ்.அறிவுடைநம்பி வழங்கினார்.
பொறுப்பாசிரியர் ஜே.கண்ணன், உடற்கல்வி ஆசிரியர்கள் டி.முரளி, பி.மார்க்கண்டன், ச.ஹரிஹரன், ரராகேஷ் ஆகியோர் விலையில்லா பொருட்களை வழங்கும் ஏற்பாட்டினை செய்தனர்.