தென்காசி மாவட்டத்தில் உரிமை கோரப்படாத 298 மோட்டார் வாகனங்கள் பொது ஏலம் - போலீஸ் சூப்பிரண்டு அறிவிப்பு
- வருகிற 30-ந் தேதி மற்றும் 31 -ந் தேதி ஆகிய 2 நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சங்கரன்கோவில் பழைய தாலுகா போலீஸ் நிலைய வளாகத்தில் வைத்து ஏலம் விடப்படுகிறது.
- வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் எடுத்த நாளான 30-ந்தேதி அல்லது 31-ந்தேதி ஏலத்தெகையுடன் ஜி.எஸ்.டி. தொகையினையும் உடனடியாக செலுத்தி வாகனத்தை எடுத்துச்செல்ல வேண்டும்.
தென்காசி:
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் புளியங்குடி காவல் உட்கோட்ட எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 293 இரு சக்கர மோட்டார் வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனம், 4 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 298 வாகனங்களுக்கு பொது ஏலம் விடப்பட உள்ளது.
வருகிற 30-ந் தேதி மற்றும் 31 -ந் தேதி ஆகிய 2 நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சங்கரன்கோவில் பழைய தாலுகா போலீஸ் நிலைய வளாகத்தில் வைத்து ஏலம் விடப்படுகிறது.
இதில் கலந்து கொண்டு வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புபவர்கள் அந்த வாகனங்களை சங்கரன்கோவில் பழைய தாலுகா போலீஸ் நிலைய வளாகத்தில் 23 -ந் தேதி முதல் 27 -ந் தேதி வரையிலான நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நேரில் பார்வையிடலாம்.
மேலும் தங்களின் பெயர், முகவரி அடங்கிய ஆதார் அட்டையுடன் ரூ. 1000 முன்பணம் செலுத்தி பதிவு செய்து டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும்.
டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் எடுத்த நாளான 30-ந்தேதி அல்லது 31-ந்தேதி ஏலத்தெகையுடன் ஜி.எஸ்.டி. தொகையினையும் உடனடியாக செலுத்தி வாகனத்தை எடுத்துச்செல்ல வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.