மூடிக்கிடக்கும் பொது கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை
- ரூ.7 லட்சம் மதீப்பிட்டில் கட்டப்பட்டது.
- கடந்த 6 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது.
அன்னூர்,
கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கஞ்சப்பள்ளி ஊராட்சி 5 கிராமங்களுடன் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இதில் கஞ்சபள்ளியில் மட்டும் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த குடும்பங்களில் 20 சதவீகதம் அளவிற்கு தனி கழிவறை வசதி உள்ளது. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அருகாமையில் தோட்டங்களில் உள்ள கழிவறையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மழைக்காலங்களில் குழந்தைகள், பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய விஷ பூச்சிகள், பாம்புகள் போன்றவை தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
இதனை தொடர்ந்து கஞ்சப்பள்ளி பஞ்சாயத்து அலுவலகத்திற்கு அருகா மையில் அமைந்துள்ள பெண்களுக்கான பொதுசு காதார வளாகம் கடந்த 2017ம் ஆண்டு ரூ.7 லட்சம் மதீப்பிட்டில் கட்டப்பட்டது. ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக பொது சுகாதார வளாகம் திறக்கப்படாமலே உள்ளது.
இதனை பொதுமக்கள் பலமுறை கேள்வி எழுப்பியும் உயர் அதிகாரிகள் வந்தவுடன் திறக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் கூறி வருகின்றனர். எனவே கட்டி முடிக்கப்பட்ட பொது சுகாதார வளாகத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.