உள்ளூர் செய்திகள்

போலீஸ் சூப்பிரண்டு நிஷாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

பொதுமக்கள் குறைதீர்வு முகாம்

Published On 2022-07-28 09:25 GMT   |   Update On 2022-07-28 09:25 GMT
  • இடப்பிரச்சனை, நில பிரச்சனை தொடர்பான பல்வேறு புகார்கள் பெறப்பட்டு சட்டப்படி தீர்வு காண சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அறிவுறுத்தினார்.
  • புறவழிச் சாலை வழியாக தனியார் மற்றும் அரசு பேருந்துகள் பல சென்று வருவதோடு, பயணிகளையும் நடுவழியில் இறக்கிவிட்டு செல்வதை தடுத்திட நடவடிக்கை கோரினார்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சட்ட ஒழுங்கு பிரச்சனை தொடர்பான பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் போலீஸ் சூப்பிரண்டு நிஷா பங்கேற்று சீர்காழி உட்கோட்ட காவல் நிலையம் சரகத்திற்கு உட்பட்ட பகுதி பொதுமக்களிடமிருந்து புகார் மனுக்களை பெற்றுக் கொண்டார். இதில் பணம் கொடுக்கல், வாங்கல், இடப் பிரச்சனை, நில பிரச்சனை தொடர்பான பல்வேறு புகார்கள் பெறப்பட்டு சட்டப்படி தீர்வு காண சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் சீர்காழி நகர வர்த்தக சங்கம் சார்பில் திரளான வர்த்தகர்கள் அதன் தலைவர் சிவசுப்ரமணியன் தலைமையில் வருகை புரிந்து புகார் மனு அளித்தனர். சீர்காழி நகருக்குள் வராமல் புறவழிச் சாலை வழியாக தனியார் மற்றும் அரசு பேருந்துகள் பல சென்று வருவதோடு, பயணிகளையும் நடுவழியில் இறக்கிவிட்டு செல்வதை தடுத்திட நடவடிக்கை கோரினர். பள்ளி நேரங்க ளில்சீர்காழி தென்பாதி மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் கூடுதலாக காவலர்களை நியமித்து போக்குவரத்தை சரி செய்ய வேண்டுமெனவும், கடை வீதியில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இரு சக்கர வாகனம் நிறுத்த பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என புகார் மனுவை அளித்தனர். இதில் ஏ.டி.எஸ்.பி தங்கவேல், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பழனிசாமி, வசந்தராஜ், இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், ஜெயந்தி, மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News