நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. அணிகள் சார்பில் பொதுக்கூட்டங்கள்-ஆவுடையப்பன் தலைமையில் தீர்மானம்
- தி.மு.க. மகளிரணி உள்ளிட்ட அணி நிர்வாகிகளுடன் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ஆலோசனை நடத்தினார்.
- புதிய நிர்வாகிகளை நியமனம் செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டங்கள், தெருமுனை பிரச்சாரம் நடத்துவது சம்பந்தமாக சார்பு அணி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் பாளை மகாராஜநகரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.
நேற்று மகளிரணி, மகளிர் தொண்டரணி, கலை-இலக்கிய பேரவை, இளைஞரணி நிர்வாகிகளுடன் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட மகளிரணி தலைவா கமலா நேரு, அமைப்பாளர் மல்லிகா அருள், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜான் ரபிந்தர், துணை அமைப்பாளர்கள் வேல்முருகன், அருள்ராஜ் டார்வின், ஆகாஷ், தில்லைராஜா, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஜெயமாலதி, துணை அமைப்பாளர் அனுராதா ரவி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது புதிய நிர்வாகிகளை நியமனம் செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கும், பரிந்துரைத்த மாவட்ட செயலாளர் ஆவுடையப்பனுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பொதுக்கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.