குற்றாலம் ஐந்தருவி அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த யானையால் பொதுமக்கள் பீதி
- கோடை காலம் நிலவி வருவதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நீர் நிலைகள் வறண்டு வருகின்றன.
- குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த யானை தென்னை மரங்களை வேரோடு சாய்த்தது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கோடை காலம் நிலவி வருவதால் நீர் நிலைகளும் வறண்டு வருகின்றன.
இதன் காரணமாக வனப்பகுதியில் இருந்து யானை, கரடி, மான்,மிளா போன்ற வனவிலங்குகள் விளை நிலங்களுக்குள்ளும், குடியிருப்பு பகுதிகளுக்கும் தண்ணீர் தேடி வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மரங்களை சாய்த்தது
இந்நிலையில் குற்றாலம் ஐந்தருவி அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த யானை ஒன்று அங்கிருந்த 7 தென்னை மரங்களை வேருடன் பிடுங்கி சாய்த்து சென்றுள்ளது.
தொடர்ந்து அருகில் இருந்த வாழை தோட்டத்தில் புகுந்த யானை அங்கிருந்த வாழைக்கன்றுகளையும் பிடுங்கி சேதப்படுத்தி சென்றது. காலையில் பொதுமக்கள் சிலர் குடி யிருப்பு பகுதிகளில் யானை கால் தடம் உள்ளதை கண்டும், தென்னை, வாழை மரங்கள் சாய்க்கப்பட்டு இருப்பதையும் கண்டும் அதிர்ச்சி அடைந்தனர்.
பொதுமக்கள் பீதி
இரவில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த யானையால் அதிர்ஷ்ட வசமாக பொதுமக்கள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் ஒற்றை யானையின் நட மாட்டம் இருப்பதால் அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
மேலும் வனத்துறையினர் ஒற்றை யானையை கண்டறிந்து அதனை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.