உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

Published On 2023-03-22 09:27 GMT   |   Update On 2023-03-22 09:27 GMT
  • 200 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தலித் பூர்வ குடி மக்களுக்கு கடந்த 2007-ம் ஆண்டு பட்டா வழங்கபட்டது
  • மக்களின் பிரச்சினை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார்.

ஊட்டி,

ஊட்டியில் காந்தல் கஸ்துரி பாய் காலனி பகுதியில் 200 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தலித் பூர்வ குடி மக்களுக்கு கடந்த 2007-ம் ஆண்டு பட்டா வழங்கபட்டது. தற்போது வீடு கட்ட நிலம் இல்லாமல் அரசு நிலத்தில் குடியிருப்ப வர்களின் வீடுகளை ஊட்டி நகராட்சி நிர்வாகம் ஜேசிபி பொக்லைன் கொண்டு இடித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கோரி விடுதலைச் சிறுத்தை கட்சியின் மாவட்டச் செயலாளர் சகாதேவன் தலைமையில் சட்டமன்ற தொகுதி செயலாளர் கட்டாரி, நகரச் செயலாளர் தம்பி இஸ்மாயில் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் அம்ரித் ஊட்டி வட்டாட்சியர் காந்தல் கஸ்தூரிபாய் காலனி மக்களின் பிரச்சினை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News