குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீர் ஆகாயத் தாமரையுடன் பொதுமக்கள் மறியல்
- இந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
கடலூர்:
கடலூரில் பலத்த மழை பெய்த காரணத்தினால் 28-வது வார்டு திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீதேவி நகர், குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளை சுற்றிலும் மழை நீர் குளம் போல் தேங்கியது. இந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர் சக்திவேல், பா.ஜனதா மாநகரத் தலைவர் வேலு வெங்கடேசன் தலைமையில் நத்தவெளி- சரவணா நகர் இணைப்பு சாலையில் ஆகாய தாமரைகளுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இத்தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.