- இந்நிலையில்புதிதாக உருவாக உள்ள திருவோணம் தாலுகாவில் நம்பி வயல் கிராமத்தை சேர்ப்பதாக தமிழகஅரசு அறிவிப்பு வெளியானது.
- இதுபோன்று பல்வேறு துறைகள் பட்டுக்கோட்டை பகுதியை சார்ந்தே அமைந்துள்ன.
பட்டுக்கோட்டை:
புதிதாக துவங்கப்பட உள்ள திருவோணம் தாலுகாவில் நம்பிவயல்கிராமத்தை இணைப்பதை எதிர்த்து நம்பிவயல் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நம்பிவயல் கிராமத்தின் மொத்த பரப்பளவு 881 ஹெக்டர், கிராமத்தின் மொத்த மக்கள்தொகை 2500 பேர், விவசாய பரப்பளவு 650 ஹெக்டர், நம்பிவயலின் இரண்டு பக்கத்திலும் சரியாக பத்து கிலோமீட்டர் தொலைவில் பட்டுக்கோட்டை மற்றும் திருவோணம் எதிரெதிர் திசையில் இருக்கிறது. நம்பிவயல் பிரசிடெண்ட் ஊராட்சி மன்ற தலைவராக கல்யாண சுந்தரம் என்பவர் இருக்கிறார்.
இந்நிலையில்புதிதாக உருவாக உள்ள திருவோ ணம் தாலுகாவில் நம்பி வயல் கிராமத்தை சேர்ப்பதாக தமிழகஅரசு அறிவிப்பு வெளியானது. அதனடிப்படையில் திருவோணத்துடன் சேர்த்தால் தங்கள் கிராம மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவார்கள் என போராட்டக்காரர்கள் கூறினர். இந்த நம்பிவயல் கிராமத்தின் எம்எல்ஏ பேராவூரணி தொகுதியை சேர்ந்தவர்.
ஊராட்சி ஒன்றியமோ பட்டுக்கோட்டையை சேர்ந்தது, வட்டாட்சியர் அலுவலகம், பட்டுக்கோ ட்டையிலும்காவல் நிலையமோ, திருவோணத்தி லும், இருக்கிறது. அதேபோல் கோட்டாட்சியர் அலுவலகம், பத்திர பதிவுத்துறை பட்டுக்கோட்டையிலும், மின்வாரிய அலுவலகம், கலியராயன் விடுதியிலும், வேளாண்மைத் துறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், பட்டுக்கோ ட்டையிலும் இருக்கிறது.
இதுபோன்று பல்வேறு துறைகள் பட்டுக்கோட்டை பகுதியை சார்ந்தே அமைந்துள்ன. இந்நிலையில் புதிதாக உருவாக உள்ள திருவோணம் தாலுக்காவில் நம்பிவயல் கிராமத்தை சேர்ப்பதை எதிர்த்து பட்டுக்கோட்டை - திருச்சி சாலையில் இன்று காலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பட்டுக்கோட்டை தாசில்தார் ராமச்சந்திரன், ஒரத்தநாடு டி.எஸ்.பி பிரவீன், பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ பிரபாகர் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.