உள்ளூர் செய்திகள்

கந்தர்வகோட்டை விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இடுபொருட்கள்

Published On 2023-02-26 06:34 GMT   |   Update On 2023-02-26 06:34 GMT
  • கந்தர்வகோட்டை விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இடுபொருட்கள் வழங்கபட்டது
  • 300 பண்ணை குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வேளாண் உழவர் நலத்திட்டம் மூலமாக முழு மானியத்தில் வழங்கப்பட்டது.

கந்தர்வகோட்டை:

கந்தர்வகோட்டை வேளாண் விரிவாக்க மையம் கூட்ட அரங்கில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இடு பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி கலந்து கொண்டு வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இடு பொருட்களை வழங்கினார். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் பஞ்சாயத்துகளில் ஒன்றான அரவம் பட்டியில் 300 பண்ணை குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வேளாண் உழவர் நலத்திட்டம் மூலமாக முழு மானியத்தில் வழங்கப்பட்டது.

மேலும் ரோட்டவேட்டர் கருவி வேளாண் பண்ணை கருவிகள், விசை தெளிப்பான், உளுந்து விதைகள், ஜிப்சம், சிங் சல்பேட் முதலான இடுப்பொருட்கள் 50 சதவீத மானியத்தில் தகுதியுடைய பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வேளாண் உழவர் நலத்துறையின் மூலமாக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் அவற்றில் பயனடைவதற்கான அரசு வழிகாட்டுதல்களையும் விபரமாக எடுத்துக் கூறப்பட்டது. நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அன்பரசன், துணை வேளாண்மை அலுவலர் முருகன், உதவி விதை அலுவலர் நாகராஜ், ரெகுநாதன், சங்கர், செல்வம், கமலி, காளிதாஸ், அட்மா திட்ட பணியாளர்கள் ராஜீவ், சங்கீதா, சுப்ரமணியன், ஐஸ்வர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News