உள்ளூர் செய்திகள்
350 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு
- 350 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்
- புதுக்கோட்டை மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் மெர்சி ரம்யாவிடம் பொதுமக்கள் அளித்த மனு மீது நடவடிக்கை
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 350 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர். இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்கவிதப்பிரியா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) செய்யது முகம்மது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.