உள்ளூர் செய்திகள்

மத்திய சிறையில் கஞ்சா, செல்போன், சிம் கார்டுகள் பறிமுதல்

Published On 2022-10-11 09:20 GMT   |   Update On 2022-10-12 09:44 GMT
  • மத்திய சிறையில் கஞ்சா, செல்போன், சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது
  • மேற்கு வங்க கைதி உள்பட 4 பேர் மீது வழக்கு

திருச்சி:

திருச்சி மத்திய சிறையில் ஆயுள் கைதிகள், தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு பல்வேறு செல்கள் உள்ளன. பல்வேறு செல்களில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் கஞ்சா, செல்போன் பயன்படுத்துவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து திருச்சி மத்திய சிறை அதிகாரி சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் ஜெயிலில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது செல்போன், சிம் கார்டு, பேட்டரி மற்றும் கஞ்சா பொட்டலங்கள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து சிறை அதிகாரி சண்முகசுந்தரம் கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வீரசிங்கம் திண்டுக்கல்லை சேர்ந்த கைதி வெள்ளத்துரை என்கிற அரவிந்த், மதுரை கைதி விக்னேஷ், சிவகங்கையை சேர்ந்த முகிலன் என்கிற ரவி, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த லாடன் தாஸ் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News